Saturday, February 21, 2015

அதிர்ச்சியான உலகக்கிண்ணப்போட்டி

  
அவுஸ்திரேலியா ,நியூஸிலந்து ஆகிய நாடுகளில் நடைபெறும் உலகக்கிண்ண கிரிக்கெற்போட்டி அதிர்ச்சியான முடிவுகளைத்தந்துள்ளன.பலம் வாய்ந்த வையாகக்கருதப்பட்ட இங்கிலாந்தும் பாகிஸதானும் விளையாடிய இரண்டுபோட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசிக்குத்தள்ள‌ப்பட்டுள்ளன.துச்சமாகக்கருதப்பட்ட ஸிம்பாப்வே தென்.ஆபிரிக்காவை ஆட்டம் காட்டி மேற்கு.இந்தியத்தீவுகளை வீழ்த்தியது.


உலகக்கிண்ணகிரிக்கெற்டின் முதல்சுற்றில் 42போட்டிகள் எஅடபெறும்.எஆன்கு காலிறுதிகள்.இரன்டுஅரைஇறுதிகள்முடிந்ததும்இறுதிப்போட்டிநடைபெறும் நியூஸிலாந்து,அவுஸ்திரேலியா,பங்களாதேஷ்,இலங்கை,ஆப்கானிஸ்தான்,ஸ்கொட்லாந்து,இங்கிலாந்து ஆகியன ஏ பிரிவிலும் இந்தியா,மேற்கு.இந்தியத்தீவுகள்,தென்.ஆபிசிக்கா,அயர்லாந்து,ஸிம்பாப்வே,ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,பாகிஸ‌தான் ஆகிய‌ன‌ பீ பிரிவிலும் இட‌ம் பெற்றுள்ள‌ன‌.

நியூஸிலாந்திலும் அவுஸ்திரேலியாவிலும் ஆர‌ம்ப‌போட்டிக‌ள் ந‌டைபெற்ற‌ன‌. நியூஸிலாந்தை எதிர்த்து இல‌ங்கையும் அவுஸ்திரெரெலியாவை எதிர்த்து இங்கிலாந்தும் ஆர‌ம்ப‌ப்போட்டிக‌ளில் விளையாடின‌. நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற‌ன‌. ஏ பிரிவில் நியூஸிலாந்து மூன்று போட்டிக‌ளில்விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிக‌ளுட‌ன் முத‌ல் இட்த்தில் உள்ள‌து. அவுஸ்திரேலியாவும் ப‌ங்க‌ளாதேஷும் த‌லா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற‌ன‌.இஅர‌ண்டு ந்ந்டுக‌ளுக்கும் இடையேயான‌ பொட்டி ம‌ழைகார‌ண‌மாக‌ கைவிட‌ப்ப‌ட்ட‌த‌னால் இர‌ன்டு நாடுக‌ளுக்கும் த‌லா ஒரு புள்ளி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.  த‌லா மூன்று புள்ளிக‌ளுட‌ன் அவுஸ்திரேயாவும் ப‌ங்களாதேஷும் முறையே இர‌ண்டாம் மூன்றாம் இட‌ங்க‌ளில் உள்ள‌ன‌.இல‌ங்கை,ஆப்கானிஸ்தான்,ஸ்கொட்லாந்து ஆகிய‌ன‌ த‌லா ஒரு போட்டியில் விளையாடி  தோல்விய‌டைந்து புள்ளிபெறாதுள்ள‌ன‌. இர‌ண்டு போட்டிக‌ளிலும் தோல்விய‌டை‌ந்த‌ இங்கிலாந்து க‌டைசி இட‌த்தில் உள்ள‌து.

ஆப்கானிஸ்தானையும் ஸ்கொட்லாந்தையும் இங்கிலாந்து வீழ்த்திவிடும் ஆனாலும் கால் இறுதிக்கு போவது மிக‌வும் க‌டின‌மான‌தாக‌ இருக்கும்.இல‌ங்கை அல்ல‌து ப‌ங்களாதேஷை வீழ்த்தினால்தான் கால் இறுதியில் விளை‌யாட‌ சில‌ வேளை ச‌ந்த‌ர்ப்ப‌ம்  கிடைக்கும்.

இல‌ங்கை த‌ன்து வெற்றிக்க‌ண‌க‌கி இன்ன‌மும் ஆர‌ம்பிக்க‌வில்லை. ப‌ங்க‌ளாதேஷுக்கு ஒரு புள்ளி கிடைத்த‌து சாத‌க‌மா பாத‌க‌மா தெரியாது.   இந்தியாமேற்கு.இந்திய‌த்தீவுக‌ள்,தென்.ஆபிரிக்கா,அய‌ர்லாந்து,ஸிம்பாவ்வே, ஐக்கிய‌ அர‌பு எமிரேட்ஸ், பாகிஸ்தான் பீ பிரிவில் வ‌ரிசையாக‌ உள்ள‌ன‌.இந்தியா,தென்.ஆபிரிக்கா, அய‌ர்லாந்து,சிம்பாவ்வே,ஆகிய‌ன‌ த‌லா ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ள‌ன‌. மேற்கு.இந்திய‌த்தீவுக‌ள்  ஒரு வெற்றியுட‌னும் ஒரு தோல்வியுட‌னும் உள்ள‌து ஐக்கிய அர‌புஎமிரேட்ஸ் ஒருபோட்டியில் விளையாடி தோல்விய‌டைந்துள்ள‌து.  பாகிஸ்தான் இர‌ன்டு போட்டிக‌ளிலும் தோல்விய‌டைந்து க‌டைசி இட‌த்தில் உள்ள‌து.

இந்தியா,மேற்கு.இந்திய‌த்தீவுக‌ள்,தென்,ஆபிரிக்கா, அய‌ர்லாந்து,சிம்பாப்வே,ஆகியன‌ த‌லா இர‌ண்டு புள்ளிகளுட‌ன் முத‌ல் ஐந்து இட‌ங்க‌ளில் உள்ள‌ன‌.பாகிஸ்தானின் நிலை மிக‌ மோச‌மாக‌ உள்ள‌து.ஐக்கிய‌ அர‌பு ர்மிரேட்ஸைத்த‌விர‌ ஏனைய‌ அனைத்து மிக‌வும் ப‌ல‌மான‌ நிலையில் உள்ள‌ன‌.தென் ஆபிரிக்காவை ஆடிப்ப‌டைத்த‌ சிம்பாவ்வேயும் மேற்கு இந்தியாவைத்தோற்க‌டித்த‌ அய‌ர்லாந்து என்ன‌ செய்ய‌ப்போகின்ற‌ன‌ என‌த்தெரியாது.


உல‌க‌க்கிண்ன‌ப்போட்டிக‌ளில் இந்தியாவை பாகிஸ்தானும் நியூஸிலாந்தை இங்கிலாந்து வீழ்த்திய‌தில்லை என்ற‌ வ‌ர‌லாறு நிரூப‌ண‌மமாகியுள்ள‌து. இல‌ங்கையை நியூஸிலாந்து வீழ்த்திய‌தில்லை என்ற‌ வ‌ர‌லாறு மாற்ற‌ப்ப‌ட்ட‌து. தென் ஆபிரிக்காவை இந்தியா வென்ற‌‌தில்லை என‌றா வ‌ர‌லாற்றுக்கு இன்று முடிவு கிடைக்கும்.

No comments: