Monday, November 23, 2015

தமிழகத்தைப் புரட்டிய வெள்ளம் மந்தகதியில் அரச உதவி


இயற்கை அன‌ர்த்தங்கள்  அவ்வப்போது தனது கொடுங்கரங்களை அகல‌ விரித்து உலகை ஆக்கிரமிப்பது தவிர்க்க முடியாதது. இயற்கையின் கோரத்தாண்டவங்களினால் உலக வரைபடம் மாற்றமடையும் சம்பவங்களிம் அரங்கேறி உள்ளன.   தமிழகத்தில் பெய்த கடும் மழையால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் குறைகளைக் களைவதற்கு தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. இந்தச்சந்தர்ப்பத்திச் சாதகமாகப் பய படுத்திய எதிர்க்கட்சிகள களத்தில் இறங்கின. எதிர்க் கட்சிகளின் சுறுசுப்பைக் கண்ட தமிழக அரசு நிவாரனபணியை முடுக்கியது.

 தமிழகத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாகஇது வரை 204 பேர் இறந்துள்ளனர். . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் தீவிரமடைந்தது  .   மழை வெள்ளம் காரணமாக  சென்னை பெருநகரமே வெள்ளத்தில் மிதந்தது.  . காஞ்சிபுரம்திருவள்ளூர் மாவட்டங்களின் ஏரிகள் நிரம்ப அதன் உபரி நீர் அடையாறுகூவம்கொசஸ்தலை ஆறுகளில் திறந்துவிட சென்னையில் திரும்பிய திசையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது..

 பலத்த மழையின் காரணமாகவும், வெள்ளத்தாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் புதன்கிழமை வரை 204 பேர் மழைக்கு இறந்துள்ளனர்  . இதில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 55 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 18 பேரும்திருவள்ளூர் மாவட்டத்தில் 5 பேரும் இறந்துள்ளனர்.


 மழை வெள்ளத்தால் தமிழக மக்கள் துன்பத்தில் ஆழ்ந்திருக்க முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுப்பதை மற்றைய அரசியல்தலைவர்கள் சாடியுள்ளனர்.வழமைபோன்றே உடனடியாக செவிமடுக்காத ஜெயலலிதா 29 நாட்களின் பின்னர் தலமைச்செயலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.மக்களுக்கு உதவும் அவசர முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. கடலூர் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் அங்கு அதிகமானோர் இறந்துள்ளனர். நிவாரணம் கோரி போராட்டம் நடத்திய சிதம்பரம் மாவட்ட மக்கள் மீது தடியடி நடத்தி பொலிஸார் விரட்டினர். 

2004 ஆம் ஆண்டு சுனாமி, 2005 ஆம் ஆண்டு நீலம் புயல், 2011 ஆம் ஆண்டு தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் இப்போது வெள்ளத்தால் சீரளிந்துள்ளது.,ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உடமைகளையும் உறவுகளையும் இழந்து இருக்க இடமின்றி தவிக்கின்றனர்.தமிழக நிர்வாகம் அசமந்தமாக இருப்பதால் மக்களின் உணர்வுகள் கொந்தளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ஜெயலலிதா சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் இருந்தன.நிலமையை உன்னிப்பாக அவதானித்த ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.கருணாநிதி,விஜயகாந்த்,ராமதாஸ், தமிழிசை செளந்திரராஜன் ஆகியோரும் தமது கட்சிசார்பாக நிவாரண உதவிகளை  அறிவித்தனர்.

வெள்ளத்தில் பாலங்கள் அடித்துச் செல்லப்படும் வேளையில் வீடியோ கொன்பிரன்சிங்மூலம் ஜெயலலிதா புதிய பாலங்களைத்திறந்தார். 2001ஆம் ஆண்டும் 2006 ஆம் ஆண்டும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நடந்து சென்று சந்தித்து ஆறுதல் கூறிய ஜெயலலிதா இன்றைய வெள்ளப்பாதிப்பை கண்டும் காணாதது போல் இருந்தார். இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றிக்காக தமிழக அமைச்சரவையே ஆர்கே நகரில் குவிந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை  சந்தித்து ஆறுதல் கூற எந்த அமைச்சரும் முன்வரவில்லை.ஜெயலலிதாவின் உத்தரவு இன்றி சுயமாகச் செயற்படமுடியாத நிலையில் அமைச்சர்கள் உள்ளனர்.


மக்களின் வேதனையும் மற்றைய அரசியல் தலைவர்களின் கண்டனங்களும் ஜெயலலிதாவை கொஞ்சம் அசைய வைத்தன.டெம்போவானில் இருந்தபடியே நிலமைகளைப் பார்வையிட்டார். மக்களின் கையைபிடித்து ஆறுதல் கூறவில்லை.வெள்ள நிவாரணம் கொடுத்த அமைச்சர்கள் சிரித்தபடி போஸ்கொடுத்தனர். இதுவும் மக்கள் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளத்தால் தமிழகம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில்  திராவிட முன்னேற்றக்கழகமும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகமும் டிஜிற்றல் பிரசாரத்திகால் பதித்துள்ளன.

 மோடியை பிரதமராகவும், நிதீஷ்குமாரை முதல்வராகவும் பதவியில் அமர்த்தி வைத்து அழகு பார்த்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் கிஷோர் குமாரை திராவிட முன்னேற்றக் கழகம் தனது டிஜிட்டல் பிரச்சாரத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த ஒரு முக்கிய ஊடகத்தின்  துணையின்றி, சோஷியல் மீடியாக்கள் துணையோடு பிரதமரானவர்   நரேந்திர மோடி என்று  கூறப்படுவதுண்டு. அந்த டிஜிட்டல் புரட்சிக்கு வித்திட்ட குழுவின் தலைவர்  பிரசாந்த் கிஷோர். பீகாரை பிறப்பிடமாகக்கொண்ட . 37 வயதாகும், பிரசாந்த் கிஷோர் ஐ.நாவில் சுகாதார நிபுணராகப் பணியாற்றியவர். 2011ல் இளம் தொழில்நுட்ப நிபுணர்களுடன் சேர்ந்து இந்திய மக்களின் ஆக்ஷன் கமிட்டி (IPAC – Indian People’s Action Committee என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்

 இவரது திறமையை அறிந்து 2012ம் ஆண்டு குஜராத் சட்டசபைத் தேர்தலிலும் 2014 மக்களவை தேர்தலிலும் நரேந்திர மோடி இவரை தன்பக்கம் இழுத்து தேர்தல் வியூகங்களை வகுக்கச் செய்தார். அதற்கு கைமேல் பலன்களும் கிடைத்தன.

 தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆட்சியையே பிடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். அதுவரை எந்த அரசியல் கட்சியும் இப்படியொரு ஒரு பிரசாரத்தைச் செய்ததில்லை என்பதால் மோடியின் வெற்றி கிஷோர் மீதான மதிப்பை  பல மடங்கு அதிகரித்துவிட்டது
 இந்நிலையில்தான் மோடியிடமிருந்து திடீரென விலகிய கிஷோ,நிதீஷ்குமார் கூட்டணிக்காக திட்டமிடலை கொடுத்து வெற்றிபெறச் செய்துள்ளார். 145 தொகுதிகளில்  வென்று காட்டுவேன் என்று அவர் கூறி  . அதை செய்தும் காட்டியுள்ளார்.

 300 பேர் கொண்ட குழுவுடன்  பீகார் தேர்தல் உத்திகளை வகுத்து நிதிஷ்குமாரை மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளார். தேர்தல் நேரத்தில் நிதிஷ்குமார் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை கூட நிர்ணயித்துள்ளார் கிஷோர். 

 இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம்   அவசரஅவசரமாக கிஷோரை சந்தித்து தேர்தல் பிரச்சார உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம்  பொருளாளர் ஸ்டாலின் பிரசாரத்தின் பின்னால் இருந்து வடிவமைப்பவர் அவரது மருமகன் சபரீசன் என்று கூறப்படுகிறது. சபரீசனே நேரடியாக கிஷோரை சமீபத்தில் சந்தித்திருக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன.

 இருதரப்பின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இறுதியாக பிரசாந்த்துடன் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப ஊடகங்களுக்கான செலவு மற்றும் பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்திற்கான கட்டணமும் பெரிய அளவில் பேசி முடிக்கப்பட்டு விட்டது என்று கூறப்படுகிறது. இவரின் திட்டம் ஸ்டாலினை முன்னிறுத்துவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 ஏற்கனவே விஷன் 234என அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகம் டிஜிட்டல் களத்துக்குள் புகுந்துவிட்டது. ஒளிரும் நிகழ்காலம்! மிளிரும் வருங்காலம்,தழைக்கட்டும் தமிழகம்! செழிக்கட்டும் தமிழர்கள்,தொடரட்டும் மேம்பாடு! ஜொலிக்கட்டும் தமிழ்நாடுஎன  பிரச்சாரங்களை தொடங்கிவிட்டது.

 தமிழகத்தில் தகவல் தொழிநுட்பப் பிரிவை முதலில் ஆரம்பித்தது அண்ணா . திராவிட முன்னேற்றக் கழகம். இந்தப் பிரசாரத்திற்கு பின்னால் இருப்பவர் ஐ.டி. பிரிவு செயலாளரும், தகவல் தொழில்நுட்ப வல்லுநருமான சுவாமிநாதன். இவர் துறைசார்ந்த வல்லுநர் என்பதோடு கட்சியின்  உறுப்பினரும் ஆவார். டிஜிட்டல் உலகில் ஜொலிக்க போவது பிரசாந்த் கிஷோரா அல்லது சுவாமிநாதனா என்ற கேள்விக்குதமிழக சட்டசபை தேர்தல் முடிவு பதில் சொல்லிவிடும்.
வர்மா
தமிழ்த்தந்தி
22/11/15

No comments: