Wednesday, November 4, 2015

காத்திருக்கும் சவால்



இந்திய மண்ணில் ரி20,ஒருநாள் தொடர்களில் வெற்றிபெற்றதெம்பில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றதுடிப்போடு காத்திருக்கிறது தென்,ஆபிரிக்கா. டோனி தலைமையிலான வீரர்களைப் புரட்டியெடுத்து சாதனைகள் பெற்ற தென்.ஆபிரிக்க வீரர்கள் கோலி தலைமையிலான வீரர்களுக்கு சவால்விடுக்கக் காத்திருக்கின்றனர். டோனியிடமிருந்து டெஸ்ட் தலைமையையைப் பெற்றபின்னர் தலைமைத்துவப்பரீட்சையில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சொந்தமண்ணில் களமிறங்கக் காத்திருக்கிறார் கோலி.
டெஸ்ட் தரவரிசையில் 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் தென்.ஆபிரிக்காவும், 100 புள்ளிகளுடன் ஐந்தாவ‌து இடத்தில் இந்தியாவும் உள்ளன. தரவரிசையில் முன்னேற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருக்கிறது.டுபிளிசி,டிவில்லியஸ் தலமையிலான ரி20,ஒருநாள் அணிகள் தொடர்களை வென்றதனால் டெஸ்ட்தொடரிலும் வெற்றிபெற வேண்டிய அழுத்தம் அம்லாவுக்கு இருக்கிறது. அதேபோன்ற அழுத்தம் இந்திய டெஸ்ட் அணித்தலைவர் கோலிக்கும் இருக்கிறது. டோனியிடம் இருந்து டெஸ்ட் அணித்தலைமையை பெற்றபின்னர் பங்களாதேஷுடனான டெஸ் போட்டியில்  சாதகமான நிலை இருந்தபோது மழை குழப்பியது 22 வருடங்களின் பின்னர்  இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்று பெற்ற பாராட்டை  தக்க வைக்க வேண்டிய இக்கட்டான நிலையில்   கோலி தவிக்கிறார்.
ஒருநாள் தொடரில் சாதிக்காத அம்லா டெஸ்ட் போட்டியில் அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.எல்கர்,வான் ஜில்,டுபிளிசி,டிவிலியஸ் ஆகியோர்  துடுப்பாட்ட வரிசையில் அரணாக உள்ளனர்.அல்பி மோகல்,ஸ்டைன் வேகத்துக்கு இந்திய அணி ஈடுகொகுக்குமா அல்லது இந்திய வீரர்களை சுழலில் சிக்க வைத்த இளம் வீரர் ரபாடா,இம்ரான் தாகிர், பிளண்டர் ஆகியோரில் சுழலில் மீண்டும் சிக்குவார்களா என்ற எதிர் பார்ப்பு உள்ளது

 இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ஷிகார் தவானும் முரளி விஜயும் களமிறங்குவார்கள்.ரஹானே,கோலி,ரோகித் சர்மா ஆகியோர் மத்திய வரிசையை பாதுகாக்க உள்ளனர்.விக்கெற்கீப்பராக டோனியின் இடத்தில் சகா இருப்பார். ஆனால் டோனிக்கு இணையாக இவர் இருக்கமாட்டார். இலங்கையில் விளையாடியதுபோல ஐந்து பந்துவீச்சாளர்களுடன் விளையாட கோலி முடிவுசெய்தால் புஜாரா,ராகுல் ஆகியோருக்கு விளையாட சந்தர்ப்பம் கிடைக்காது.முரளி விஜய்க்குப் பதிலாகசிலவேளை ராகுல் விளையாடலாம்.

ஒருபோட்டியில் விளையாடத்தடை விதிக்கப்பட்டதால் இஷாந்த் சர்மா இல்லாதது பலவீனம்தான்.ஒருநாள் போட்டியில் வள்ளலாக இருந்த புவனேஸ்வர் தனது இடத்தை பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளார். உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோரின் வேகத்தை கோலி எதிர் பார்க்கிறார். நீண்ட நாட்களின் பின்னர் ரவீந்திர ஜடேஜா இருப்பது நம்பிக்கையளிக்கிறது. காயத்தில் இருந்து மீண்ட அஸ்வின் இடம்பிடித்தால் கூடுதல் பலமாக இருக்கும். வழ‌க்கில் சிக்கிய அமித் மிஸ்ரா விளையாடுவது சந்தேகம்

இந்திய தென்.ஆபிரிக்க அணிகள் இரண்டு வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. கடைசியாக ந‌டந்த போட்டியில் தென்,ஆபிரிக்கா வெற்றி பெற்றது. இரண்டு வருடங்களின் பின்னர் நான்கு டெஸ்ட்  போட்டிகளின் இந்தியா விளையாடுகிறது. 2013 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான‌ டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியாவில் தென்,ஆபிரிக்கா ஐந்து டெஸ்ட் தொடர்களில் விளையாடியது.இந்தியா இரண்டு தொடர்களிலும் தென்.ஆபிரிக்கா ஒரு தொடரிலும் வெற்றி பெற்றன. இரண்டு தொடர்கள் வெற்றி தோல்வியின்றி முடிந்தன.தென்.ஆபிரிக்காவுக்கு எதிராக ஷேவக் அதிகபட்சமாக 319 ஓட்டங்களும் இந்தியாவுக்கு எதிராக அம்லா அதிக பட்சமாக 253 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.தென்.ஆபிரிக்காவுக்கு எதிராக இந்தியா 643  ஓட்டங்களும், இந்தியாவுக்கு எதிராக தென்.ஆபிரிக்கா 620 ஓட்டங்களும் எடுத்துள்ளன.
ஐ.சி.சி நடத்தும் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிரான‌ போட்டிகளில் தென்.ஆபிரிக்கா வெற்றி பெற்றதில்லை.மற்றைய போட்டிகளில் தென்.ஆபிரிக்க அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. 2010ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற  10 டெஸ்ட் தொடர்களில் தென்.ஆபிரிக்கா தோல்வியடையவில்லை. 2010 ஆம் ஆண்டு மேற்கு.இந்தியத்தீவுகள் 2/0,2012 நியூஸிலாந்து 1/0,இங்கிலாந்து2/0,அவுஸ்திராலியா 1/0, 2012 இலங்கை 1/0ஸிம்பாப்வே 1/0,2010 ஆம் ஆண்டு இந்தியா 1/1,2012/13 ஆம் ஆண்டு பாகிஸ்தான் 0/0, 2015 ஆம் ஆண்டு பங்களாதேஷ் 0/0. டெஸ்தொடர்களில் தென்.ஆபிரிக்கா பலமாக உள்ளதால் இந்தியா கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
முதல் டெஸ் போட்டி மொகாலியில் நடைபெறுகிறது.இம்மைதானத்தில் 11டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன. இந்தியா ஐந்து போட்டிகளில் வெற்றி  பெற்று ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்தது.2003 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து ஆறு விக்கெற்ககளை  இழந்து 630 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறுத்தியதே அதிக பட்சமான ஓட்ட எண்ணிக்கை. 2013 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராகதவான் அதிக பட்சமாக‌ 187 ஓட்டங்கள் அடித்தார்.



No comments: