இந்தியஅரசுக்கு
பெரும் தலையிடியைக்கொடுத்த நிழல் உலக தாதாக்களில் ஒருவரான சோட்டாராஜன் கடந்த
மாதம் 25 ஆம் திகதி
இந்தோனேஷியாவின் பாலித்தீவில் கைது
செய்யப்பட்டார்.
தாவூத் இறாஹிம், சோட்டாராஜன்
ஆகிய இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கிபோல் மும்பையில் இருந்து இந்தியாவை
ஆட்டிப்படைத்தவர்கள்.
போதைவஸ்து,விபச்சாரம்,களியாட்டம் போன்பனவற்றுக்கு பெயர்போன
பாலித்தீவுக்கு அடிக்கடி செல்பவர்கள்மீது இந்தோனேஷிய பொலிஸார் ஒருகண்
வைத்திருப்பது வழமை. சட்டவிரோத செய்ல்கள் செய்பவர்கள் அவர்களின் கண்ணில்
மண்னைத்தூவி தமது காரியங்களை கனகச்சிதமாக செய்வார்கள்.அவுஸ்திரேலியாவில் இருந்து
அடிக்கடி பாலித்தீவுக்கு வந்துபோகும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் இந்தோனேஷிய
பொலிஸ்கைது செய்தது. தம்மால் கைது செய்யப்பட்டவர் இன்ரபோல் பொலிஸால் தேடப்படும்
நிழல் உலகதாதா என்பது இந்தோனேஷியபொலிஸுக்குத் தெரியாது.
போலிக் கடவுச்சீட்டுடன் கைது
செய்யப்பட்ட இந்தியரைப்பற்றிய தகவலை
இந்தோனேஷியப் பொலிஸார் தேடியபோதுதான் அவர் சோட்டாராஜன் என இந்திய அதிகாரிகளால்
அடையாளம் காணப்பட்டது.சோட்டா ராஜனைப்பற்றிய மேலதிக விபரங்களை அறிந்த இந்தோனேஷிய
அதிகாரிகள் அவருக்குபலத்த பாதுகாப்பு வழங்கினர்.
ராஜேந்திர நிகல்ஜே
என்பதுதான் சோட்டாராஜனின் உணமைப்பெயர்.மும்பைக்கு அருகே உள்ள ச்லோனார் என்ற
கிராமத்தில் 1960
ஆம் ஆண்டு பிறந்தார்.சதாஷிவ் என்ற மில் தொழிலாளியின் மகனான இவர் சிறிவயதிலே
படிப்பை கைவிட்டு தியேட்டரில் பிளக் ரிக்கெற் விற்றார். பொலிஸார் இவரைக் கைது
செய்யமுற்பட்டபோது ஆறு பொலிஸாரைத்தாக்கினார். இதௌதான் இவரது முதல் குற்றம் இதற்காக
சிறைக்குச்சென்றுவந்தபின் சிறைக்குப் போவதை பெருமையாக நினைத்தார். இரண்டு கொலைகள்
காரணமாக பொலிஸாரால் தேடப்பட்டார். நீதிமன்றத்தில் பிரபல தாதா ஒருவரை வெட்டிச்சாய்த்ததால்
இவரின் பெயர் பிரபலமானது.
திலக் நகரில் பிரபல
தாதாவான ராஜன் மகாதேவ் நாயரின் நட்பு
இவரின் கரத்தைப்பலப்படுத்தியது. ராஜன்
மகாதேவ் நாயரை படா ராஜன் எனவும் இவரை
சோட்டாராஜன் எனவும் அழைத்தார்கள்.
படாராஜன் என்றால் பெரிய ராஜன். சோட்டாராஜன் என்றால் சிறிய ராஜன்.சிறிய ராஜனின்
செயல்கள அனைத்தும் கொரூரமானவை. ஈவுஇரக்கம் பார்க்காது எதிரிகளை துவம்சம் செய்வார்.
தாதாக்களின் வாழ்க்கை
நிரந்தரமானதல்ல. எதிரிகளின் குறி எந்தநேரமும் அவர்களை நோக்கியே
இருக்கும்.அரசியல்வாதிகளும் பொலிஸாரும் கொடுக்கும் பாதுகாப்பு நிரந்தரமானதல்ல.
எதிரிகளால் படா ராஜன் பழிவாங்கப்பட்டபின்னர் சோட்டா ராஜன்
தலைவரானார். மும்பையின் பிரபல நிழலுலக தாதாவான தாவூத் இப்ராகிமின் தொடர்பு சோட்டா
ராஜனின் குழுவுக்கு புதிய தெம்பைக்கொடுத்தது.
தாவூத்
இப்ராஇப்ராஹிமின் அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டுவரவேன்டிய நிலை மும்பை
பொலிஸுக்கு ஏற்பட்டது. இதனை அறிந்த தாவூத் தனது வலதுகரம்போல் செயற்படும்
சோட்டாராஜனுடன் 1980 ஆம் ஆன்டு துபாய்க்கு
சென்றார்.துபாயில் இருந்தபடி தாவுத் நிழல் உலக வேலைகளைச்செய்தார்.1993 ஆம் ஆண்டு பாபர் மசூதி
இடிக்கப்பட்டபோதுஆத்திரமடைந்த தாவூத், இந்திய
அரசைப்பழிவாங்குவதற்காக மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை
நடத்தினான்.அரசாங்கத்திப் பழிவாங்குவதற்காக பொதுமக்களைக்கொல்வதை சோட்டாராஜன்
விரும்பவில்லை.
சோட்டாராஜனுக்கு
எதிரான தாவூத்தின் தளபதிகளான ஷக்கீல்,சரத்
ஷெட்டி,செள்த்யா ஆகியோர்
இதனைத் தமக்கு சாதகமாக காய்நகர்த்தி
சோட்டா ராஜனை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினார்கள். இதனை அறிந்த
சோட்டாராஜன், தாவூத்தைப்பிரிந்து
தனிராஜ்ஜியம் அமைத்தார். 1996
இல் சோட்டாராஜனின் சம்ஜாஜ்யம் விரிவடைந்தது.தாய்லாந்து,மலேசியா போன்ற நாடுகளில் டிஸ்கோ இரவு
விடுதிகள் பலவற்றை பினாமிகளின் பெயரில்
சோட்டாராஜன் ஆரம்பித்தார். இதனால் தாவூத்தின் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது.
தாவூத்தைக் கைது
செவதற்காக இந்திய அதிகாரிகள் துபாக்கு சென்றபோது அவர்
பாகிஸ்தானுக்குத்தப்பிவிட்டார். சோட்டாராஜன் பாங்கொங்கில் தலை மறைவானார்.
சோட்டாராஜனைக்கொல்ல தாவூத் தனது அடியாட்கலை
ஏவிவிட்டார். இதனை அறிந்த சோட்டாராஜன் மும்பாய் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட
ஆறுபேரை மும்பாயில் கொலை செய்தான். இதனால் மும்பை மக்கள் சோட்டாராஜனை புகழ்ந்தனர்.
சோட்டாராஜன் மீது தீராதவெறியை ஏற்படுத்த இச்சம்பவம் காரணமானது.
பாங்கொங்கில் சோட்டா
ராஜன் தங்கி இருந்த வீட்டை தாவூத்தி ஆட்கள் சுற்ரிவழைத்துத் தாக்குதல்
நடத்தினார்கள். 2000 ஆம்
ஆன்டு நடைபெற்ற சம்பவத்தில் சோட்ட ராஜனின் தளபதியான ரோஹொத் வர்மா கொல்லபட்டான்.
சோட்டராஜனின் வயிற்றில் குண்டு பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினான்.
சோட்டா ராஜன்
அவுஸ்திரேலியாவில் தங்கி இருப்பதைத் தெரிந்துகொண்ட தாவூத்தின் ஆட்கள் அவரை கொல்ல
திட்டமிட்டிருந்தனர். சோட்டா ராஜனுக்கு
சிறுநீரக சத்திர சிகிச்சை செய்யப்பட்டதால் அவரை நெருங்குவது சுலபம் என
தாவூத்தின் ஆட்கள் கருதியபோது சோட்டாராஜன் திடீரென கைதுசெய்யப்பட்டது சந்தேகத்தை
ஏற்படுத்தி உள்ளது. வெளியில் இருப்பது பாதுகாப்பு இல்லை என்பதால் இந்திய சிறையில்
இருப்பது பாதுகாப்பு என்பதால் சரணடைந்ததாக கருதப்படுகிறது.
இந்தியாவின்
பாதுகாப்பில் இத்தனை காலமும் இருந்த சோட்டா ராஜனை பாதுகாப்பதற்காகவே இந்த
சரணடையும் படலம் நடைபெற்றதாகவும் கருதப்படுகிறது.தாவூத் வெளிநாட்டில் இருந்தாலும்
இந்தியாவில் எதையும் செய்யக்கூடிய தொடர்பு அவனுக்கு உள்ளது. சிறைச்சாலைகளில்
தாவூத்துக்கு வேண்டப்பட்டவர்கள்
இருக்கலாம் அவர்களினால் சோட்டா ராஜனுக்கு ஆபத்து ஏற்படலாம்.
சோட்டாராஜனுக்ல்கு
எதிராக 75க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன.நேபாளத்திலும்
சோட்டாராஜனுக்கு எதிரான கொலைக்குற்றச்சாட்டு உள்ளது.சோட்டா ராஜனுக்கு சொந்தமான
சுமார் 5000
கோடிரூபா சொத்து இருப்பதாக நம்பப்படுகிறது. அதை நாட்டுக்கு கொண்டுவர வேண்டிய கடமை
இந்திய அரசுக்கு உள்ளது.
நிழலுலக தாதா சோட்டா
ராஜன் சுயநலவாதியென்றும்,
யார் என்ன சொன்னாலும் சந்தேகப்பட்டு கூட
இருந்தவர்களையே கொலை செய்தவர் என்றும் நிழலுலக வட்டாரங்கள் கூறுகின்றன. நிழலுலக
தாதா தாவூத் இப்ராஹிமிடமிருந்த தொடர்பை துண்டித்து 1995ல்
சோட்டா ராஜன் தனி சாம்ராஜ்யம் உருவாக்கினார். இதனால் தாவூத் ஆட்களால் தனது
உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கை உணர்வோடே சோட்டா
ராஜன் சுற்றித்திரிந்தார்.
அதிகப்படியான எச்சரிக்கை உணர்வு, காண்போர் மீதெல்லாம் சந்தேகத்தை உருவாக்கியது. இதனால், சோட்டா ராஜன் தனக்கு நெருக்கமாக இருந்த ஓபிசிங், மோகன் கோடியன்,
பாலா கோடியன், பாரத் நேபாளி மற்றும் சாமுவேல் ஆகியோரை பினிஷ் செய்துள்ளார்.
இரு வருடங்கள் முன்பு நடைபெற்ற பத்திரிகையாளர்
ஜேடே கொலை வழக்கில் சோட்டா ராஜனுக்கு தொடர்புள்ளது. அந்த பத்திரிகையாளரும் சோட்டா
ராஜன் பற்றிய தகவல்களை தாவூத் வலதுகரமாக உள்ள சோட்டா ஷகீலுக்கு தெரிவித்த சந்தேகத்தின்
பேரில் கொலை செய்யப்பட்டவர்தான்
சோட்டா ராஜனிடம் யாராவது ஒருவரை பற்றி புகார்
சொன்னால், கோள்மூட்டினால், அதுகுறித்து உண்மையை ஆராயாமலே கொலை செய்துவிடுவது வழக்கமாம்.
இதனால் அவரை நம்பி தாவூத் குரூப்பில் இருந்து வந்தவர்கள் எல்லோரும் உயிரை கையில்
பிடித்தபடி வலம் வந்துள்ளனர்.
இப்படித்தான் ஒருமுறை இந்தியன் முஜாகிதீன்
தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ரியாஸ் பத்கலை கொன்றுவிட்டதாக கூறிய தனது அடியாளுக்கு, பல கோடி பணம் கொடுத்து அனுப்பியுள்ளார் சோட்டா ராஜன். பின்னர், ரியாஸ் பத்கலை தான்தான் ஆட்களை வைத்து கொன்றதாக பகிரங்கப்படுத்தவும்
செய்துள்ளார். ஆனால்,
உண்மையிலேயே ரியாஸ் பத்கல் கொலை
செய்யப்படவில்லை என்பது சோட்டா ராஜனுக்கே பிறகுதான் தெரியவந்துள்ளது.
டான் வரதபாய் என்னும் வரதராஜ முனுசாமி,ஹாஜி மஸ்தான் ஆகிய இரண்டு தமிழர்கள்
மும்பாயில் நிழல் உலக தாதாவாக இருந்தனர். இவர்களின் காலத்திலேதான் ராஜன் மகாதேவ்
நாயரும் தாதாவாக வலம் வந்தார். ஒருகாலத்தில் இவர்கள் மூவரும் வைத்ததுதான்
சட்டம்.இவர்கள் மூவரும்தான்இன்றைய நிழல் உலக தாதாக்களுக்கு முன்னோடி.சோட்டாராஜன்
அகப்பட்டுவிட்டான்.அதுத்த தாதாவன தாவூத்தை கைது செய்வதற்கு இந்திய அரசாங்கம்
முயற்சி செய்கிறது பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்காததனால் அவரைநெருங்க முடியவில்லை
.
இந்திய தாதாக்களின்
வாழ்க்கை சில திரைப்படங்களாக வெளிவந்து சக்கை போடுபோட்டன. வரதராஜ முனுசாமி
முதலியாரின் கதைதான் கமல் நடித்த நாயகன் படமாக வெளிவந்தது. அஜய் தேவகான் நடித்த
ஒன்ஸ் ரபான் எ டைம் அமிதாப் கதாநாயகனாக நடித்த தீவார் ஆகிய படங்கள் ஹாஜிமஸ்தானின் கதையை பின்னணியாகக்கொண்டு
தயாரிக்கப்பட்டவை.சோட்டா ராஜனின் இந்த வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு ஹிந்தியில் 'கம்பெனி', 'வாஸ்தவ' என்று
இரு சினிமா படங்கள் தயாரிக்கப்பட்டன. கம்பெனி படத்தில் சோட்டா ராஜன் போன்ற
வேடத்தில் விவேக் ஓபராய் நடித்தார். 'வாஸ்தவ' படத்தில் சோட்டா ராஜன் போன்று சஞ்சய்
தத் நடித்தார்.
சோட்டா ராஜன்
கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டாலும் தனது 3
மகள்களையும் நன்றாக படிக்க வைத்துள்ளார். அவரது மூத்த மகள் இங்கிலாந்தில்
எம்.பி.ஏ. படித்து வருகிறார். அவரது இரண்டாவது மகள் என்ஜினீயராக இருக்கிறார்.
சோட்டா ராஜனுடன் பிறந்த சகோதரர்கள் தற்போதும் செம்பூரில் கட்டுமானத் தொழில் செய்து
வருகிறார்கள்.
பாகிஸ்தானின் ஆதரவும்
முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளின் தொடர்பும் தாவூத்துக்கு இருப்பதனால் அவர் சுதந்திரமாக
இருக்கின்றார்.
ரமணி
தமிழ்த்தந்தி
08/11/15
No comments:
Post a Comment