தமிழக
சட்டசபைத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள மக்களைத்தேடி பயனம்
செல்லத்தொடங்கி விட்டனர். நமக்கு நாமே என்ற கோஷத்துடன் ஸ்டாலின் சுற்றுப்பயணம்
மேற்கொண்டுள்ளார். மக்களுகாக மககள் பணி என்ற பெயருடன் விஜயகாந்த் மக்களைக்காணப்
புறப்பட்டு விட்டார்.மாற்றம் முன்னேற்றம் பாதையில் அன்புமணி புறப்பட்டு
விட்டார்.வைகோ மறுமலர்ச்சி பயணத்தை ஆரம்பித்து விட்டார்.மக்களை நோக்கி மக்கள்
தளபதி கி.கே.வாசன் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்து விட்டார். மக்கள் நலகாங்கிஎஅஸ்
கூட்டங்கலை இளங்கோவன் ஆரம்பித்து விட்டார்.மக்கள்
தரிசன பயணம் மேற்கொள்ள ஜெயலலிதா ஆலோசனை செய்கிறார்.
தேர்தல்
நெருங்கும் சமயத்தில்தான் அரசியல்வாதிகள் மக்களிடம் செல்வார்கள்தேர்தலுக்க்கான
முனைப்பு எதுவும் இல்லாத நிலையில் மக்களின் மீது கரிசனை கொண்டு அவர்களை நோக்கி
செல்லத்தொடங்கிவிட்டனர்.தேர்தல் சமயத்தில் செல்வதை விட தேர்தலுக்கு முன்னரே
அவர்கலின் மனதில் இடம் பிடிக்க ம்யற்சி செய்கின்றனர்.
ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக
நமக்கு நாமே என்ற கோஷத்துடன் கடந்த இரண்டு மாதங்களாக மக்களைச்சந்தித்துவருகிறார்
ஸ்டாலின்.கன்னியகுமரியில் ஆரம்பமான நமக்கு நாமே சுற்றுப்பயணம் இம்மாதம் 4 அல்லது 5 ஆம் திகதி காஞ்சிபுரத்தில் நிறைவடையும் 21 ஆம்திகதி
காஞ்சிபுரத்தில் நிறைவடையும். 21 ஆம் திகதி பிரமாணடமான கூட்டம் நடத்த
ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
அன்றாடம் கஸ்டப்பட்டு உழைத்து வாழும்மக்களை
குறிவைத்து ஸ்டாலினின் நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள்,கட்டட
வேளையாட்கள்,தொழிலாளிள்,மாணவர்கள், பெண்கள் என பட்டியலிட்டு ஸ்டாலின் சந்தித்து
அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறார். வீதி ஓரத்தில் தேநீர்கடையைக்கண்டால்
வாகனத்தை நிறுத்தி அவர்களுடன் அளவளாவி தேநீர் குடித்து தனது
ஆதரவைத்தெரிவிக்கிறார். வயலில் இறங்கி குறைகளைக் கேட்கிறார்.
ஸ்டாலினின் நமக்கு நாமே நடைப்பயணம் ஏனைய அரசியல்
தலைவர்களை விழிப்படையச்செய்துள்ளது. கடந்த இரன்டு மாதங்களாக ஸ்டாலினைப்பற்றிய
செய்திகள அதிகளவில் மக்களிடம் போய்ச்
சேர்ந்துள்ளது. இது ஸ்டாலினைப்பற்றிய ஒருமாயையை உருவாக்கிவிடுமோ என்ற அச்சம்
அவர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பே ஏனைய தலைவர்களும் ஏதோ ஒரு காரணத்தை
முன் வைத்து மக்களிடம் சென்றுள்ளனர்
நடைப்பயணத்தின்
மூலம் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சுத்திவந்த வைகோ மறுமலர்ச்சி பயணம்
என்ற பெயரில் மக்களைச் சந்தித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இவரது மறுமலர்ச்சி பயணம் நிறைவுபெறும்.
சோர்ந்து போயிருக்கும் தனது கட்சித்தொண்டர்களை இந்தப்பயணம் உற்சாகமடையச்செய்யும்
என நம்புகிறார். பலமான கட்சியுடன் கூட்டணி சேர வைகோ விரும்பாமையினால் அவரின்
பின்னால் உள்ள இரண்டாம் கட்டத்தலைவர்கள் கட்சிமாறிய வேளையில் விசுவாசமான
தொண்டர்கள் தனக்குப்பின்னால் நிற்பார்கள் அன அவர் திடமாக நம்புகிறார்.
மக்களுக்காக
மக்கள் பணி என்ற பெயரில் தன்னால் செய்யப்பட்ட அபிவிருத்திப்பணிகள மக்களிடம்
கையளித்து வருகிறார் விஜயகாந்த்.மக்களிடம் இருந்து சற்று தூரமாக
இருக்கும் வியஜகாந்த் இதன் மூலம் மக்களை நெருங்குகிறார்.வியயகாந்த யாருடன்
கூட்டணி வைக்கப்போகிறார் என அவரது கட்சித்தொண்டர்களுக்கே தெரியாதுள்ள
நிலையில் மக்களிடம் சென்று அவர் தனது பணிகளை விளம்பரப்படுத்துகிறார்.
எந்தக்கட்சியுடனும்
சேராது தனித்து தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகும் எண்ணத்தில் இருக்கும்
அன்புமணி மாற்றம் முன்னேற்றப் பாதை மூலம்
மக்களை நெருங்கி தமது கொள்கைகளை விளக்குகிறார்.வன்னியச் அமூகத்தை மட்டும்
குறிவைத்து செயற்படும் இவரால் ஏனைய சமூக மக்களின் மனதில் இடம் பிடிக்க
முடியாது.
காங்கிரஸில்
இருந்து வெளீயேறி புதிய கட்சியை ஆரம்பித்த ஜி.கே.வாசன் தனது கொள்கைகளை விளக்குவதற்காக
மக்களைச் சந்தித்து வருகிறார். மக்களை நோக்கி மக்கள் தளபதி என்றகோஷத்துடன்
இவரது பயணம் செயற்படுகிறது.கூட்டணி சேரும்போது பேரம் பேசுவதற்கான
உத்தியாக இவரது பயணம் அமைந்துள்ளது.காங்கிரஸ் கட்சியும் தனது பங்குக்கு
மக்களைச் சந்தித்து வருகிறது.சோனியாவையும் ராகுலைய்ம் அழைத்து வந்து கூட்டம்
நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
கட்சித்தலைவர்கள்
அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு மக்களைச் சந்தித்து வரும் வேளையில் ஜெயலலிதா
கொடநாட்டில் ஓய்வெடுப்பது என்ற பிரசாரம் பலித்துவிடுமோ என்ற அச்சம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்
மத்தியில் உள்ளது. ஜெயலலிதாவும் மக்களைச் ச்ந்திக்க வேன்டும் என அவர்கள்
நினைக்கிறார்கள்.
மற்றைய
தலைவர்களைப்போல நீண்டதூரம் பயணம் செய்து மக்களைச் சந்திப்பதற்கு ஜெயலலிதாவால்
முடியாது.முக்கியமான நகரங்களுக்குஹெலிகொப்டரில் சென்று மக்களைச் சந்திக்க
ஜெயலலிதா திட்டம் போட்டுள்ளார்.தொண்டர்களின் வரவேற்பால் எதிரணியினரை கலங்கவைக்க
அண்ணா திராவிட் முன்னேற்றக் கழகம் திட்டம் போட்டுள்ளது.
தலைவர்களின்
சுற்றுப்பயணச்செய்திகளுக்கு அவர்களின் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும்
முக்கியத்துவம் கொடுக்கின்றன. சமூகவலைத்தலங்கள் எதிர்மாறான பிரசாரங்களை
பரப்புகின்றன.தேர்தலுக்கு இரண்டொருமாதங்கள் இருக்கும் போது நடைபெறும் பிரசாரப்பணிகள்
இப்பொழுதே ஆரம்பித்து விட்டன.
வர்மா
தமிழ்த்தந்தி 01/11/15
No comments:
Post a Comment