Saturday, November 7, 2015

இலங்கைத் தமிழரைக் கைவிட்ட வைகோ

தமிழகசட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.நாடாளுமன்றத்தேர்தலைப்போன்று உதிரிக்கட்சிகளின் துணையுடன் தனியாகத்  தேர்தலைச் சந்தித்து முதல்வர் பதவியை தக்கவைக்கத் துடிக்கிறார் ஜெயலலிதா. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதாவிடம் பறிகொடுத்த முதல்வர் பதவியை பிடுங்குவதற்கு கருணாநிதி முயற்சிக்கிறார். அவரின் முயற்சிகள் வெற்றியடைவதைப்போல மாயத் தோற்றம் காட்டிவிட்டு மறைந்து விடுகின்றன.
ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்ப சபதம் எடுத்த வைகோவும் விஜயகாந்தும் ஆளுக்கு ஒருபக்கம் நிற்பதனால் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே ஜெயலலிதாவின் வெற்றி உறுதியாகியுள்ள‌து. கருணாநிதியின் கரத்தைப்பலப்படுத்தினால் மட்டுமே ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பலாம் இல்லையேல்  ஜெயலலிதாவின் வெற்றியைத் தடுக்க யாராலும் முடியாது. வைகோ, விஜய‌காந்த், திருமாவளவன் ஆகியோரை தன்னுடன் இணையும்படி கருணாநிதி வருந்தி அழைக்கிறார். அந்த அழைப்பை புறம் தள்ளிய  தலைவர்கள் தமக்கென ஒருபாதையை வகுத்துக்கொண்டனர்.வைகோவும் திருமாவளவனும் கூட்டணி சேர்ந்து தமக்கான பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். விஜயகாந்த் முடிவெடுக்க முடியாது தடுமாறுகிறார்.
வைகோவின் தமிழின உணர்வு மற்றைய தலைவர்களைவிட சற்று அதிகமானது.திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் , கங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் அவர் கூட்டணி சேர்ந்தபோது இலங்கைப் பிரச்சினையையும் தமிழர்களையும் முன்னிறுத்துவார்.தமிழீழம்தான் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுதரும் என்பதில் உறுதியாக இருப்பவர்.இடது சாரிகளுக்காக தனித்தமிழீழம் என்ற கொள்கையைக் கைவிட்டுவிட்டார்.முல்லைப்பெரியாறுவிவகாரத்தைப் பெரிதுபடுத்தாமையினால் தமிழகத்தையும் கைவிட்டுவிட்டார்.

தமிழக அரசுக்கு எதிராக   ஆறுதலைவர்கள் இணைந்து போராட்டங்களை  நடத்தினார்கள். அந்தப்போராட்டத்துக்கு மககள் ஆதரவு அதிகமாக இருந்தது. அரசியலுக்கப்பால் நடந்த போராட்டங்கள் வெற்றியளித்ததனால் மக்கள் நல கூட்டணி  என்ற அமைப்பை அரசியல் கூட்டணியாக்க வைகோ முயற்சித்தார்.அதற்கு உடன்படாத தமிழருவி மணியனும் ஜவஹிருல்லாவும் வெளியேறினர். திருமாவளவனுக்கும் இதில் உடன்பாடில்லை. இறுதியில் வைகோவும்,திருமாவளவனும்  மாக்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் கூட்டணியை அறிவித்த‌னர்.

 கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுடன், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்னை, கூடங்குளம் அணு உலை, முல்லை பெரியாறு அணைப்பிரச்னை உள்ளிட்ட சில பிரச்னைகளில் முரண்பட்டு நிற்கும் நிலையில், குறைந்த பட்ச செயல்திட்ட வரைவு அறிக்கையில் இதில் சமரசம் செய்து கொண்டுள்ளன. 

 தன்னுடைய ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க வேண்டும் என்று கட்டாயம் குறிப்பிடும் வைகோ , தன் முக்கிய கோரிக்கையை இடதுசாரி கட்சிகளுக்காக விட்டுக்கொடுத்துள்ளார்.. கூடங்குளம் அணு உலைப் பிரச்சினை,முல்லைபெரியாறு அணைப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.  இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக பலபோராட்டங்களை முன்நின்று நடத்தியவர் வைகோ.அப்போராட்டங்களின் பலனாக அடிக்கடி  கைதுசெய்யப்பட்டார்.அவரதுசொல்லுக்குக்கட்டுப்பட்ட தொண்டர்களும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டனர். அவை எல்லாம் ஏட்டில் இருக்கும் நிலை உருவாகி உள்ளது. இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பாக ஓங்கி ஒலித்த குரல் அடங்கி விட்டது. இலங்கை விவகாரத்தில் அதிதீவிரம் காட்ட வேண்டாம் எனபல தலைவர்கள் பலமுறை எடுத்துக்கூறியபோது அடங்காத வைகோ இடதுசாரிகளுடன் கூட்டணி சேர்வதற்காக அமைதையாகிவிட்டார். தனது அரசியல் எந்த நிலையிலும் தடுமாறாத வைகோ முக்கியமான பிரச்சினைகளை கைவிட்டு இடது சாரிகளுடன் சேர்ந்து  தேர்தலைச் சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில் இடதுசாரிகளின் நிலை அதலபாதாளத்தில் உள்ளது.வைகோவுக்கென நிரந்தரமான வாக்கு வங்கி கிடையாது. தலித் மக்களின் வாக்குவங்கியை கணிசமாக வைத்திருக்கும் திருமாவளவனும் இந்தக்கூட்டணியில் இருக்கிறார். 

 திராவிட முன்னேற்றக்கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,காங்கிரஸ்,பாரதீயஜனதாக்கட்சி ஆகியவற்ருடன் கூட்டணி சேரமாட்டோம் என்ற உறுதி மொழியுடன் வைகோ தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது.இந்தக்கூட்டணிக்கு வைகோதான் தலமைதாங்குகிறார்.ஆனால் முதலமைச்சர் வேட்பாள‌ர் யார் என இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. விஜயகாந்துக்காக கூட்டணிக்கதவை அகலத் திறந்து வைத்துள்ளனர். விஜயகாந்த் திரும்பியும் பார்க்காது பாரதீய ஜனதாவின் வாசலை நோக்கியபடி இருக்கிறார்.
வைகோ தலைமையிலான கூட்டணி அமையவேண்டும் என்பது ஜெயலலிதாவின் தீராத ஆசை. அந்த ஆசையை வைகோ நிறைவேற்றி விட்டார்.இந்தக்கூட்டணியால் கருணாநிதியின் எதிர்பார்ப்பு தவிடு பொடியாகி உள்ளது.இது இப்படியே தொடரவேண்டும் என ஜெயலலிதா விரும்புகிறார். இக்கூட்டணியை உடைப்பதற்கான காலம் வரும் வரை கருணாநிதி காத்திருக்கிறார்.
மக்கள் கலைக்குழு கழக கலைக்குழு பொறுபாளரான கோவன் கைதுசெய்யப்பட்டதால்  தமிழக அரசுக்கு எதிரான உணர்வலைகள் மேலெழுந்துள்ளன.
 
திராவிட முன்னேற்றக்கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,காங்கிரஸ்,பாரதீயஜனதாக்கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி சேரமாட்டோம் என்ற உறுதி மொழியுடன் வைகோ தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது.இந்தக்கூட்டணிக்கு வைகோதான் தலமைதாங்குகிறார்.ஆனால் முதலமைச்சர் வேட்பாள‌ர் யார் என இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. விஜயகாந்துக்காக கூட்டணிக்கதவை அகலத் திறந்து வைத்துள்ளனர். விஜயகாந்த் திரும்பியும் பார்க்காது பாரதீய ஜனதாவின் வாசலை நோக்கியபடி இருக்கிறார்.
வைகோ தலைமையிலான கூட்டணி அமையவேண்டும் என்பது ஜெயலலிதாவின் தீராத ஆசை. அந்த ஆசையை வைகோ நிறைவேற்றி விட்டார்.இந்தக்கூட்டணியால் கருணாநிதியின் எதிர்பார்ப்பு தவிடு பொடியாகி உள்ளது.இது இப்படியே தொடரவேண்டும் என ஜெயலலிதா விரும்புகிறார். இக்கூட்டணியை உடைப்பதற்கான காலம் வரும் வரை கருணாநிதி காத்திருக்கிறார்.

மக்கள் கலைக்குழு கழக கலைக்குழு பொறுபாளரான கோவன் கைதுசெய்யப்பட்டதால்  தமிழக அரசுக்கு எதிரான உணர்வலைகள் மேலெழுந்துள்ளன. 
தெருக்கூத்து பாடகர் கோவன், தில்லை நகர் காந்திபுரம் பகுதியில் அடிக்கடி பிரசாரம் செய்வார். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவன் இந்த பகுதியில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களில் பாடி உள்ளார். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தேசபக்தி பாடல்களைப் பாடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனால் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில்மதுக்  கடையை மூடச்சொல்லி பாடல் இயற்றி பாடிய கோவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே நாள் இரவில் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  இவரை தமிழ்நாட்டின் கத்தார்' என்று செல்லமாக அழைக்கின்றனர்.
 இட்லி ஒத்த ரூபா... கக்கூஸூ 5 ரூ.... சாப்பாடு 5 ரூபா.... பருப்பு 100 ரூபா" என்று இன்றைய நிலையை இயல்பாக பாடும் கோவன், கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் . அவருக்கு நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில்தான் ஆர்வம் அதிகரித்துள்ளது. மக்கள் கலை இலக்கியக் கழகம்' அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அனல் தெறிக்குமாம். கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு... நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு' என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் கொப்பளிக்கிறது. ஊர் ஊராக போய் ஆளும் அரசுக்கு எதிராகவும் அநியாயத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் கோவன். 'ஊருக்கு ஊர் சாராயம்.... தள்ளாடுது தமிழகம்' என்ற பாடலைப் பாடியதால் கோவன் கைது செய்யப்பட்டார்..
 தேசிய பாதுகாப்பு குண்டர் சட்டத்தின் கீழ் கோவன்  கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவரது மகன் மனுத்தாக்கல் செய்தார். தேசத்துக்கு எதிரான செயல் எஅதனையும் கோவன் செய்யவில்லை. மதுக்கடைகளை மூடச்சொல்வது தேசத்துரோகம் ஆகாது என மனுவில் குறிப்பிட்டார். கோவனின் மகனது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பதில் மனு அனுப்ப தமிழக அரசுக்கு காலக்கெடு விதித்துள்ளனர். அதுவரை கோவனை  தேசியபாதுகாப்பு குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என உத்த‌ரவிட்டனர்.
கோவனின் கது விவகாரத்தில் தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களும் அரசியல் தலைவர்களும் தமிழக அரசைக்கண்டித்து அறிக்கைகள் விடுத்தனர். பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை செள‌ந்தரராஜன் கோவனை குற்றம் சாட்டியுள்ளார்.ஜெலயலிதாவும் பிரதமர் மோடியும் இணைந்து நிற்கும் படங்களை மது ஒழிப்பு பிரசாரப் பாடல்களில் பயன்படுத்தியமையால் கோவன்  மீது அவர்  கோபமாக இருக்கிறார். கோவன் கைது செய்யப்பட்டமையால் எழுந்துள்ள எதிப்பலையை தமிழக அரசு இலகுவாகச்ச‌மாளித்துவிடும்
வர்மா
தினத்தந்தி 08/11/15





No comments: