இந்தியப்பிரதமர் மோடி இந்தியாவில் இருப்பதைவிட
அதிக நாட்கள் வெளிநாட்டில்தான் இருக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்
சாட்டுகின்றன. கடந்த 25
நாடுகளுக்கு 27 முறை பயணம் செய்துள்ளார். ரஷ்யாவுக்கு மூன்று முறை
சென்றுள்ளார். நட்புறவு,வர்த்தகம், அணுசக்தி உதவி,எல்லைப் பிரச்சினை, தொழில்
நுட்பம் போன்ற பல ஒப்பந்தங்கள்
கைச்சாத்திடப் பட்டன. சில பயணங்கள் வெற்றிகரமாக அமைந்தாலும் பாகிஸ்தானுக்கு
திடீரென மோடி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா, ஆப்கானிஸ்தான் ஆகிய
நாடுகளுக்கு திட்டமிட்ட வகையில் சென்ற மோடி ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பும்
வழியில் திடீரென பாகிச்தானுக்குச் சென்றதால் இந்திய எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நீண்ட பயணம் செய்பவர்கள் களைப்பாறுவது போல் இடையில் பாகிஸ்தானுக்குச் சென்று உலக
நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் மோடி. மோடியின் இந்த துணிகரமான செயலலை பாகிஸ்தான் பாராட்டி உள்ளது.
பிரிட்டிஸின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற கணத்தில் இருந்து இந்தியாவும்
பாகிஸ்தானும் பகை நாடுகளாகின. இந்தியாவின் தலையீட்டினால் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில்
இருந்த கிழக்கு பாகிஸ்தான் தனிநாடாகியது.
பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவானபின்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்
இடையிலான பகை மேலும் இறுகியது.
காஷ்மீர் விவகாரத்தில் இரண்டு நாடுகளும் முட்டி
மோதிக் கொண்டிருக்கின்றன. இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை மேசையில்
அமருவார்கள் நிறைவீர்ற முடியாத கருத்துக்களால் பேச்சு வார்த்தை இடை நடுவில் கைவிடப்படும். இந்தியாவுக்கும்
பாகிஸ்தானுக்கும் இடையிலான பகையால் கிரிக்கர் ரசிகர்கள் நொந்து போய் உள்ளனர். பகை
அரசியலால் விளையாட்டு விபரீதமாகி உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் மோடியைக்
குறிவைத்துக் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதக்
குழுக்கள் அதிகமாக உள்ள பாகிஸ்தானுக்கு மோடி சென்றது பயங்கரவாதத்துடனான விளையாட்டு
என எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
மார்ச்,ஏப்ரல்,மே,ஜூன்,ஜுலை,ஓகஸ்ட்
,செப்ரெம்பர்,டிசம்பர் ஆகிய எட்டு
மாதங்கள் மோடி வெளிநாட்டில் சுற்றுப்பயணம்
செய்தார்.செஷல்ஸ்,மொரீஷியஸ்,இலங்கை,பிரான்ஸ்,ஜேர்மனி,கனடா,சீனா,மங்கோலியா,தென்.கொரியா,பங்களாதேஷ்,உஸ்பெகிஸ்தான்,கஜகஸ்தான்,ரஷ்யாதுக்மேரிஸ்தான்,கிர்கிஸ்தான்,தஜிகிஸ்தான்,ஐக்கிய
அரபு
நாடுகள்,அயர்லாந்து,அமெரிக்கா,இங்கிலாந்து,துருக்கி,மலேஷியா,சிங்கப்பூர்,ரஷ்யா,ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்
ஆகிய நாடுகளுக்கு மோடி விஜயம் செய்தார்.
இந்திரா காந்தி பிரதமராக
இருந்தபோது 1973 ஆம் ஆண்டு
கனடாவுக்குச் சென்றார். 42 வருடங்களுக்குப்பின்னர் மோடி கனடாவுக்குச் சென்றார். மங்கோலியாவுக்குச் சென்ற
முதலாவது இந்தியப் பிரதமர் மோடி. அவர்
சென்ற இடமெல்லாம் செங்கம்பளம் விரித்து
வரவேற்பளிக்கப்க்கப்பட்டது. மோடியின் வெளிநாட்டு விஜயத்தால்
இந்தியாவுக்குப் பல நன்மைகள் கிடைத்துள்ளன. அதேபோல் அவர் சென்ற நாடுகளும்
இந்தியாவால் பயனடைந்தன.
பாகிஸ்தானைப் போன்றே
இந்திய சீனஎல்லையும் பதற்றம் நிறைந்ததாக இருக்கிறது. எல்லை மீறும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.
மோடியின் சியான விஜயத்தால் எல்லைப் பிரச்சினை பற்றி சுமுகமான பேச்சு வார்த்தை
நடைபெற்றது. செஷல்ஸ் நாட்டுடன் நான்கு
ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இதில்
கடலோர பாதுகாப்பு ஒப்பந்தன் மிக முக்கியமானது. மொரீஷியஸ் நாட்டின் தேசிய தின
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து
கொண்டார்.
பிரான்ஸ் நாட்டுடன் அணுசக்தி,பாதுகாப்பு வர்த்தக
ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. வர்த்தக தொழில் நுட்ப உதவி பற்றி ஜெர்மனியுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
மங்கோலிய உட்கட்டமைப்புக்கு ஒரு பில்லியன்
டொலர் உதவி வழங்கப்படும் என மோடி உறுதியளித்தார். இந்தியாவின்
உட்கட்டமைப்பு,ரயில்வே சிமாட் சிற்றி போன்ற திட்டங்களிக்கு தென்.கொரியா பத்து
பில்லியன் டொலர் வழங்க முன்வந்துள்ளது.
எல்லை பாதுகாப்பு ,வர்த்தகம்,போக்கு வரத்து போன்ற மிக முக்கியமான் ஒப்பந்தங்கள்
பங்களாதேஷுடன் கைச்சாத்திடப்பட்டன
உபெகிஸ்தான்,கஜகஸ்தான்,துர்க்மெனிஸ்தான்,கிகிஸ்,தஜிகிஸ்தான் ஆகியநாடுகளுடன்
வர்த்தகம் நட்புறவு சார்ந்த பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.ஐந்து
வருடங்களில் இந்தியாவில் ஐந்து இலட்சம் கோடி முதலீடு செய்ய அமீரகம் முடிவு
செய்துள்ளது.
மோடியின் உலக வலத்தை எதிர்க்கட்சிகள்
விமர்சித்தாலும் இந்தியாவுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன.
ரமணி
தமிழ்த்தந்தி
03/01/16
2 comments:
நல்ல பகிர்வு
சென்னை பித்தன்
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
சூரன்.ஏ.ரவிவர்மா
Post a Comment