தமிழின் பெருமைகளை உலகறியச்செய்யும் நான்காவது உலகத்தமிழாரா ய்ச்சி மாநாடு இலங்கையில் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டபோது இலந்க்கைத்தமிழர்கள் பேருவகை அடைந்தனர்.
கோலாலம்பூர்,சென்னை,பாரிஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்ற முதல் மூன்று தமிழாராய்ச்சி
மாநாடுகளைப்பற்றி அறிந்த இலங்கைத் தமிழ் மக்கள் நம்நாட்டில் நடைபெறப்போகும்
தமிழாராய்ச்சி மாநாட்டைபார்ப்பதற்கு
ஆர்வமாக இருந்தார்கள். இலங்கி அரசாங்கத்தின் தடைகளை உடைத்து யாழ்ப்பணத்தில்
நடந்த நான்காவது உலகத்தமிழாராய்ச்சி
மாநாடு தமிழர் வாழ்வில்
ஆறாச்சோகத்துடன் முடிவடைந்தது.
1974 ஆம் ஆண்டு
ஜனவரிமாதம் 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை சிறப்பாக நடைபெற்ற உலகத்
தமிழாராய்ச்சி மாநாட்டின் 10 ஆம் திகதிநாள் வீரசிங்கம் மண்டபத்தில் பரிசளிப்பும் விருந்தினர் உபசாரமும்
நடைபெற்றது. ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடியிருந்தவேளை போலீசாருக்கும் போது
மக்களுக்கும் இடையிலான முறுகல் நிலையைத்தொடர்ந்து
பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். மின்கம்பிகள் அறிந்து விழுந்ததிலும்
ஒன்பது பேர் பலியானார்கள். 42 வருடங்கள் கடந்தும் அந்த வடு இன்றும் மனதை
வாட்டுகின்றது.
புதுடில்லியில் 1974 ஆம் ஆண்டு
26 ஆவது அகில உலக கீழைத்தேய கல்வி ஆய்வாளர் மாநாடு
நடைபெற்றது. அங்கு அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ்
திராவிட ஆய்வுகளில் ஆர்வம் உள்ளவர்களும்
மாநாட்டில் கலந்து கொண்டவர்களும் இணைந்து இதனை உருவாக்கினர். பேராசிரிய தனிநாயக அடிகளார். பேராசிரியர்
வா.ஐ.சுப்பிரமணியம் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் அந்த மாநாட்டில் கலந்து
கொண்ட 26 பேர் இணைந்து தமிழாராய்சி மன்றத்தை உருவாக்கினர். அவர்களில் பேராசிரியர் தனிநாயக
அடிகளார்.பண்டிதர் க. கணபதிப்பிள்ளை. க.பொ.இரத்தினம்
ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலில்
இருந்து ஆரம்பமான வாகனப்பேரணி தமிழர் கலாச்சாரத்தையும் பெருமைகளையும் விளக்கின. இலங்கைத் தமிழர்
வரலாறு பெருமை என்பன பேரணிவாகனங்களில் காட்சிப்படுத்தப்பட்டன. மலையில் வீரசிங்கம்
மண்டபத்தின் முன்னால் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடினர். மக்கள் வெள்ளம் அலை மோதியதால் மண்டபத்துக்கு வெளியே மேடை
அமைக்கப்பட்டு வைபவம் நடைபெற்றது.
இலங்கை அரசால் விஸா மறுக்கப்பட்ட
இரா.ஜனார்த்தனன் இறுதி நாள் பேசுவதற்காக இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்திருந்தார். அப்போது யாழ்ப்பாண நகரத்திலிருந்து பொலிஸ் நிலையம்
செல்வதற்காக பொலிஸ் ஜீப் ஒன்று வந்தது. வீதியில் மக்கள் திரண்டிருந்ததனால் பொலிஸ்ஜீப் செல்லமுடியாது
நின்றது. பொலிஸ் உயர் அதிகாரியான
சந்திரசேகரவுக்கு மக்கள் வழி விடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொலிஸார் கண்டபடி சுட்டனர். அப்போது மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. கூடி இருந்த மக்கள் சிதறி ஓடினர்.
அழுகுரல்களும் அவல ஓலங்களும் இறுதிநாளில் அரங்கேறின. இந்த களேபரத்தில் ஒன்பதுபேர் உயிரிழந்தனர். சுழிபுரத்தைச் சேர்ந்த 14 வயதான நந்தகுமார், தொல்புரத்தைச் சேர்ந்த 15 வயதான கேசவராசன், நாச்சிமார்கோயிலடியைச் சேர்ந்த 20 வயதுடைய சிவானந்தன், நாயன்மார்கட்டைச் சேர்ந்த 27 வயதுடைய தேவரத்தினம், பளையைச் சேர்ந்த 28 வயதுடைய யோகநாதன், கோப்பாயைச் சேர்ந்த 54 வயதுடைய பொன்னுத்துரை, நாயன்மார்கட்டைச் சேர்ந்த 60 வயதுடைய ஆறுமுகம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 60 வயதுடைய சிங்கமரிங்கம் மற்றும்
பருத்தித்துறையைச் சேர்ந்த சரவணபவன் ஆகியோர் மரணமானார்கள். பலர் காயமடைந்தனர்.
தமிழாராய்ச்சி மாநாட்டு மரணம் அரசாங்கத்தின்மீது கோபத்தி ஏற்படுத்தியது. நடந்த துயரத்துக்காக
அரசாங்கம் மனவருத்தப்படவில்லை. இலங்கை அரசங்கத்தை விட்டு தமிழ் மக்கள் தூரவிலகிச்செல்ல இதுவும் ஒருகாரணம். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை மாற்றான் தாய்
மனப்பான்மையுடன் நடத்துவதாக உணர்ந்த தமிழ்
மக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பை
வெளிக்காட்டினர். அப்போது அனா செனவிரட்ன பொலிஸ் மாஅதிபராக இருந்தார். பின்னர் தமிழ் இளைஞர்களை அடக்கி ஒடுக்குவதில் இவர் ஆர்வம்
காட்டினார்.
தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்த ஒன்பது
போரின் ஞாபகார்த்தமாக வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் நினைவுத்தூபி
அமைக்கப்பட்டுள்ளது. விஷமிகளால் பலமுறை இடித்து வீழ்த்தப்பட்ட தூபி இன்றும் புது
மெருகுடன் காட்சியளிக்கிறது.
ஜனவரி பிறந்தால் யாழ்ப்பாணத்தின் முதல்
நிகழ்ச்சியாக தூபியில் அஞ்சலி செலுத்துவதில் தமிழ்த்தலைவர்கள் ஆர்வம்
காட்டுவர்கள். வருடாந்த நிகழ்ச்சியாக அஞ்சலி செலுத்துவது மாறிவிட்டது. அந்த
இடத்துக்குரிய புனிதத்தை கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். தூபிக்கருகே கலாச்சார சீரழிவு நடைபெறுவதைத்
தடுப்பது தமிழ் மக்களின் கடமை.
வானதி .
சுடர் ஒளி
ஜனவரி 13,19/16
No comments:
Post a Comment