Thursday, January 14, 2016

தமிழ் மககளின் மனதில் இடம் பிடிப்பாரா மைத்திரி?

 மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சியை அகற்றிட வேண்டும் என தமிழ் மக்கள் விரும்பினார்கள்.  அவர்களின் விருப்பம் நிறைவேறுவதற்கு அரசியல் தலைவர்கள் முட்டுக்கட்டையாக இருந்தனர்.  மசூதிகள் தக்கப்பட்டதாலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களால் அவர்களும் ஆட்சியை மற்ற வேண்டும் எஎனத்  துடித்தனர். அனல், முஸ்லிம் தலைவர்கள் தமது இருப்புக்காக புதிய அரசியல் சட்டங்கள் எல்லாவற்றுக்கும் தலையாட்டினர். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதால் சிங்கள மக்களின் நம்பிக்கை அதிகரித்தது. மகிந்தவை அட்சியில் இருந்து அகற்ற முடியாது என்ற அதித நம்பிக்கை உருவானது. சந்திரிகா,,ரணில்,மைத்திரி கூட்டு அந்த நம்பிக்கையை உடைத்தெறிந்தது. நல்லாட்சி என்ற கோஷத்துடன் புதிய அரசு அமைந்து ஒரு வருடம்  பூர்த்தியாகிவிட்டது ஒந்த ஒருவருடத்தில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்ற கேள்விக்கு அம என உடனடியாகப் பதில் கூற முடியாது.
மேலெழுந்த வாரியாக ஒருசில நன்மைகள் கிடைத்தனவே தவிர தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்படவில்லை. வடக்கு மாகாண சபையை திறம்பட நடத்துவதற்கு அன்றைய ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆளுனரை மாற்றுவதற்காகவே வடக்கு மக்கள் தேர்தலில் வாக்களித்தனர். ஆளுனரை மாற்றி நல்லாட்சி ஆரம்பமானது. வடமக்கான ஆளுனர் சந்திரசிறி மாற்றப்பட்டு எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிக்கார நியமிக்கப்பட்டார். முதலமைச்சருக்கு முட்டுக்கட்டை போட்ட பிதாம செயலர் மாற்றப்பட்டு புதியவர் நியமிக்கப்பட்டார்.  முதலமைச்சருக்கு எதிராக உள்ளிருந்தே புதிய தலைவலிகள் ஆரம்பமாகின.
 தமிழ் அரசியல் கைதிகள்விடுதலை செய்யபடுவர்கள் என்ற எதிர்பார்ப்புக்கு புதிய தடைகள் உருவாகின சந்திரிகா கொலை முயற்சியில் குற்றம் சாட்டப்பட்ட பெண் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். இருபது வருடங்களாக குற்றவாளி என்ற சந்தேகத்தில் அவர் அனுபவித்த கொடுமைகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்படவில்லை. இவரைப்போன்று குப்பாளர் விருதலை செய்யப்பட்டனர். ஒப்புதல் வாக்கு மூலம் ஏற்றுக்கொள்ளப்படமையினால் விடுதலையானவர்களின் எதிர்காலம் இருண்டதாகவே உள்ளது. தமிழ் அரசியல் கைதிகள்  தமது விடுதலைக்காக சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். வசமாய் போன்று வாக்குறிதிகள் வழங்கப்பட்டன. வடக்கு கிசக்கு முடங்கும் வகையில்  ஹர்த்தால் நடத்தப்பட்டது. ஜனாதிபதி மைத்திரி தலையிட்டு வக்களித்ததணல்  அரசியல் கைதிகள்  சாகும் வரையிலான உண்ணா விரதத்தைக் கைவிட்டனர். 30 அரசியல் கைதிகள் கடும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர். ஏனையோர் தமது விடுதலைக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.
வடக்கு மீனவர்களின் வழ்வாதாரப் பிரச்சினையான தமிழக மீனவரின் அத்து மீறல் தொடர் கதையாக உள்ளது.  தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்கிறது.  அதற்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். பல சுற்றுப்பேச்சு   வார்த்தைகள்  முடிவின்றித் தொடர்கின்றன.
ஜனாதிபதி வாக்குறுதியளித்தது போல  அதி உயர் பாதுகப்பு வலயங்கள் படிப்படியாக விடுவிக்கப்படுகின்றன. அடுத்த தலைமுறை தாம் பிறந்ததாக பெற்றோர் கூறிய இடங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவை எல்லா புதர் மண்டிய பூமியாக உள்ளன. வரலாற்றுப் பெருமை மிக்க ஆலயங்கள்,பாடசாலைகள் எல்லாம் அழிக்கப்பட்டன. மன்னர் காலத்து கல் வெட்டுகள் போன்று தம் கால நினைவுகளை முதியவர்கள் மீட்டுப் பார்க்கின்றனர். சம்பூர், வலிகாம ஆகிய பகுதிகளின் மக்களின் எதிர் பார்ப்பு நிறைவேறி உள்ளது.
வடக்கு மக்களின் குடிநீர்ப் பிரச்சினை பூதாகரமாக எழுந்து நிற்கிறது. குடிநீரில் கழிவு ஒயில் உள்ளது என்றும்  ஆபத்தான மாசு சுன்னாகம் பகுதியில் இல்லை என்றும் மாறுபட்ட அறிக்கைகள் மக்களைக் குழபுகின்றன. தமது ஆய்வுதான் சரி என இரண்டு பகுதியும் கூறுவதால் மக்கள் குழம்பிப்போய் உள்ளனர்.
 ஓமந்தை சோதனைச்சாவடி அகற்றப்பட்டது வடக்கு மக்களுக்கு நிம்மதியாக உள்ளது. போதை வஸ்த்தும் மதுப்பாவனையும்  அதிகரித்தது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியளிக்க வைத்துள்ளது. விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புத்தம் புதிய வீதிகள் போக்கு வரத்துக்கு இலகுவாக இருக்கும் அதேவேளை அதிவேகம் அனாவசிய விபத்துக்களை உண்டாக்குகின்றன. 
நல்லாட்சியின் ஆரம்பம் முன்னாள் அரசியல்வாதிகளை கலங்க வைத்ததது.முன்னாள் அமைச்சர்களான திஸ்ஸ அத்த நாயக்க, பசில் ரஜபக் ஷ,ஜனக்க பண்டார தெனக்கோன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதிரை ஆகியோர் கைது செய்யப்பட்ட போது அரசியல் பழிவங்கல் என்றார்கள்.  முன்னாள் ஜனாதிபதி, மஹிந்த கோத்தாபய ஆகியோரை விசாரணை செய்தபோது அதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
லசந்த ரவிராஜ்,    ஆகியோரின் கொலை விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பத்திரிகையாளர்  பிரகீத் காணாமல்போன சம்பவத்தின் கொலையாளிகளை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.  ஆயுதக்கப்பல் விவகாரத்தில் முக்கிய பிரமுகர் கைது செய்யப்படுவர் என்ற எதிர்பார்ப்பு இந்த ஆண்டும் தொடரப் போகிறது.
 புதியதொரு நாட்டை உருவாக வேண்டும் என ஜனாதிபதி மைத்திரி விரும்புகிறார். நல்லாட்சிக்கு எதிரானவர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்.  அமைச்சர் பதவியை எதிர்பார்த்து பலர் காத்திருக்கின்றனர். அவர்களை திருப்திப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலையில் ஜனாதிபதி உள்ளார்.  
நல்லாட்சியில் ஒரு இருண்ட உலகம் இருப்பதாக    உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச  திட்ட அமைப்பின்  அறிக்கை கூறுகிறது.அந்த இருண்ட உலகில் தமிழ்ருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடருவதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.கடத்தல்,துன்புறுத்தல்,பாலியல் பலாத்காரம்,சித்திரவதை என்பன தொடர்வதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. உலக நட்டு நெருக்கடியில் இருந்து இலங்கை தப்பி விட்டது. நல்லாட்சியின் நன்மை இஅலந்க்கைக்கு கிடைத்துள்ளது. ஜெனிவாவில் எதிர் நோக்கிய நெருக்கடி குறைந்துள்ளது. சீனாவின் பிடியில் இருந்த இலங்கையை  மிட்டு விட்டதாக அமெரிக்காவும் இந்தியாவும் கருதுகின்றன.  இலங்கயை விட்டு வெளியேற சீனா விரும்பவில்லை. நல்லாட்சியின் மனதில் இடம் பிடிக்க   காய் நகர்த்துகிறது.
ஊர்மிளா
சுடர் ஒளி
13,19.16




No comments: