தேர்தல் நெருங்கும்போது புற்றீசல்போல் கருத்துக்கணிப்புகளும் வெளிவரத்தொடங்கிவிடும்.
தமக்குச்சாதகமான கருத்துக்கணிப்புகளை ரசிக்கும் தலைவர்கள் எதிர்மறையானவற்றை
புறக்கணிப்பார்கள். தேர்தல்கால கருத்துக்கணிப்புகள் சிலவேளை
பொய்த்துப்போவதுண்டு. தினகரன் பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பினால் அதனுடைய
மதுரை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு
ஊழியர்கள் கொல்லப்பட்ட வரலாறு தமிழகத்துக்குள்ளது.
தமிழகத்தில் நடத்தப்பட்ட சில
கருத்துக்கணிப்புகள் அரசுக்கு எதிராக உள்ளன. சஞ்சிகைகள் பத்திரிகைகள்,தனியார்
நிறுவனங்கள் ஆகியன கருத்துக்கணிப்பு நடத்துவது வழமையனது. அரசாங்கமும் புலனாய்வு
செய்து கருத்துக்கணிப்பு நடத்தி தனது பலத்தை சுய பரிசோதனை செய்யும். அட்சியில்
உள்ளவர்கள் தமக்குச்சாதகமான கருத்துகணிப்பை
எதிர்பர்ப்பர்கள். பலசமயங்களில் அரசாங்கத்தை. திருப்திப்படுத்துவதற்காக
கருத்துக்கணிப்புகள் திருத்தப்படுவதுண்டு. தமிழகத்தில் நடத்தப்பட்ட
கருத்துக்கணிப்புகள் அரசுக்கு எதிராக உள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன
ஆட்சியமைக்க வேண்டும் என 58 சதவிகிதமானவர்கள் தெரிவித்துள்ளனர். 42
சதவிகிதமானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மூன்றாவது அணி வெல்லும் என்ற
நம்பிக்கையில் உள்ள தலைவர்களுக்கு இந்தமுடிவு சாதகமாக இல்லை. எனினும் வெற்றி
தமக்கே என அவர்கள் நினைக்கின்றனர். மூன்றாவது அணிக்கு தமிழக மக்களை
என்றைக்குமே அதரவு தெரிவித்ததில்லை. திராவிட
முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றை ஆட்சியில் இருத்தி அழகு பார்த்த
தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தை ருசிக்க
விரும்புகிறார்கள்.
தமிழக அரசின் மீது மக்கள்
வெறுப்படைந்திருப்பது கருத்துக்கணிப்புகள்
மூலம் தெரிய வந்துள்ளது. சென்னையை வட்டிய
வெள்ளம் ஜெயலலிதாவுக்கு எதிராக போக்கை
மக்கள் மத்தியில் விதைத்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக தகுதி இல்லாதவர் என
அதிகமான மக்கள் நினைக்கிறார்கள். தனை தமிழக அரசியல் வாதிகளும் தெரிந்து
வைத்துள்ளனர். ஜெயலலிதாவை அட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர். ஆனால் அரசியல்வாதிகள் தமது பலவீனத்தை தெரிந்து கொண்டும் அதிக தொகுதிகளுக்காக இரகசிய
பேரம் பேசுகின்றனர்.
தமிழ்க முதல்வராகும் தகுதி கருணாநிதிக்கு உள்ளதென
ஒருகருத்துக்ணிப்பு கூறுகின்றது. வேறு ஒரு
கருத்துக்கணிப்பு ஸ்டாலினை
முன்னிலைப்படுத்தி கருணாநிதியை இரண்டாம் இடத்துக்கு தள்ளி உள்ளது. இதனால் திராவிட
முன்னேற்றக் கழகத்தினுள் சலசலப்பு உண்டாகி உள்ளது. கருணாநிதிக்கும்
ஸ்டாலினுக்கும் பனிப்போர் நடைபெறுவதாக தகவல் வெளிவரும் நிலையில் இப்படியான
கருத்துக்கணிப்பை கருணாநிதி விரும்பவில்லை
.
தமிழகத்தின்
அடுத்த முதல்வராக தகுதி, திறமைகள்
உடையவர்கள் யார் என்ற பட்டியலில் முதல் இடத்தில் கருணாநிதியும், இரண்டாவது இடத்தில் ஜெயலலிதாவும், உள்ளனர்
3வது இடத்தில் மு.க.ஸ்டாலின், 4வது இடத்தில் விஜயகாந்த் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில், ராமதாஸ், வைகோ, அன்புமணி ஆகியோர் பிடித்துள்ளார்கள்.
யாருக்கு உங்கள் வாக்கு என்ற கேள்விக்கு திமுகவிற்கு 35.6% பேரும், அதிமுக விற்கு 33.1% பேரும், தேமுதிக விற்கு 6% பேரும், மதிமுக விற்கு 3.9% , பா.ம.க 3.9%, பாஜக 3.8%, காங்கிரஸ் 2.% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது.
3வது இடத்தில் மு.க.ஸ்டாலின், 4வது இடத்தில் விஜயகாந்த் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில், ராமதாஸ், வைகோ, அன்புமணி ஆகியோர் பிடித்துள்ளார்கள்.
யாருக்கு உங்கள் வாக்கு என்ற கேள்விக்கு திமுகவிற்கு 35.6% பேரும், அதிமுக விற்கு 33.1% பேரும், தேமுதிக விற்கு 6% பேரும், மதிமுக விற்கு 3.9% , பா.ம.க 3.9%, பாஜக 3.8%, காங்கிரஸ் 2.% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது.
சென்னை
லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் இப்போது தேர்தல்
நடத்தப்பட்டால் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும். கருணாநிதி முதல்வராவார் என தெரியவந்துள்ளது. சென்னை லயோலா கல்லூரியின்
கருத்துக்கணிப்புகள் பொய்ப்பதில்லை. இந்தக் கருத்துக்கணிப்புக்கும் தமக்கும்
தொடர்பில்லை என சென்னை லயோலா கல்லூரி அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு
நெருக்கமானவர்கள் இதனை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
ஜெயலலிதாவுக்கு
எதிரான மனநிலையில் தமிழக மக்கள் உள்ளனர். இதனை சரியாக ஒருங்கமைப்பதற்கு தமிழக
அரசியல் தலைவர்கள் தயாராக இல்லை. ஒரு கட்சி ஆட்சியையே தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.
கருத்துக்கணிப்புகளும் இதனையே வெளிப்படுத்துகின்றன. கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்
என அரசியல் தலைவர்கள் கோஷம்
போடுகிறார்கள். ஜெயலலிதாவின் ஆட்சியை
அக்கற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அதற்காக திராவிட முன்னேற்றக்
கழகத்துடன் விஜயகாந்த இனைய வேண்டும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. பொது
எதிரியை விழுத்துவதற்கு கூட்டணி
சேரவேண்டும் என விஜயகாந்த் முடிவெடுக்கவில்லை. தனக்கு அதிக தொகுதிகள் வேண்டும்
என பேரம் பேசுவதிலேயே அவர் காலத்தைக்
கடத்துகிறார்.
திராவிட
முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றை தவிர்த்து வேறு கட்சிகளுடன் கூட்டணி
அமைத்தால் வெற்றி பெறமுடியாது என விஜயகாந்த் உணர்ந்துள்ளார். விஜயகாந்தால்
முதல்வராக் முடியாது ஆனால், முதல்வரை
தீர்மானிக்கும் சக்தி அவரிடம் உள்ளது. விஜகந்தின் வாக்கு வங்கி குறைவடைந்துள்ளது.
பொது அவரின் நடவடிக்கை தலைவர் என்ற அந்தஸ்தை கேள்விக்குறியாக்குகிறது. இவற்றைத்
தெரிந்து கொண்டும் அவரின் வரவுக்காக கூட்டணிக் கதவை அகலத் திறந்தபடி
காத்திருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன்
விஜயகாந்த் சேர வேண்டும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. விஜயகாந்த் உடனடியாக
முடிவெடுக்காது தனக்கு சாதகமான நிலை வரும் வரை காத்திருக்கிறார்.
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தமிழாக அரசு மாறும் என்பது எழுதப்படாத விதியாக
உள்ளது. இதனால் கருணாநிதி தெம்பாக இருக்கிறார். விஜயகாந்த கேட்கும் அதிக தொகுதியை
விட்டுக் கொடுக்க அவர் தயாராக இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை ஒதுக்கிவைத்ததால் தோல்வியடைந்ததை
கருணாநிதி மறக்கவில்லை. கடந்த முறைவிட்ட
தவறை மீண்டும் ஒருமுறை விட அவர் தயாராக இல்லை. இந்த உண்மையை விஜயகாந்த் புரிந்து
கொண்டால் ஜெயலலிதாவை தோல்வியடையச்செய்து அவரும்
வெற்றி பெறலாம்.
தேர்தல் திகதி
அறிவிக்கப்பட்டபின்னர் பெரம்பெசல் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
வர்மா
தமிழ்த்தந்தி
17/01/16
No comments:
Post a Comment