Tuesday, February 9, 2016

ஒலிம்பிக்குக்கு தயாரான பிரேஸில்

உலகின் மிகப் பிரமாண்டமான  போட்டியான ஒலிம்பிக்கின்  ஆரம்பபணிகள் பிரேஸிலில் மிக வேகமாக நடைபெறுகின்றன. உலகின் பல நாடுகளில் தகுதிகான் போட்டிகள் நடைபெற்று  தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 42 போட்டிகளுக்காக 206  நாடுகளில் இருந்து  10,500 போட்டியாளர்கள் தகுதிகாண் போட்டியில் பங்குபற்றுகிறார்கள். 112  வருடங்களின் பின்னர் கோல்ப் 92  வருடங்களின் பின்னர் ரகர் ஆகியன இம்முறை ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்டுள்ளன.

7.5 மில்லியன்  நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3.8 மில்லியன்  நுழைவுச்சீட்டுகள் ஐரோப்பாவில் விற்பனையாகும் 25.000 ரெனிஸ் பந்துகள்  8400    பூப்பந்துகள் 60,000  ஹங்கர்கள் 315 குதிரை லாடன்கள் 100,000 கதிரைகள்  72,000  மேசைகள் 34,000   கட்டில்கள் 11 மில்லியன் கரண்டிகள் தயாராக உள்ளன.


45,000 தொண்டர்கள், 85,000 ஊழியர்கள்,6.500  உத்தியோகத்தர்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்த தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கி.மு 796ஆம் ஆண்டு ஏதென்ஸில் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமானது   கி.பி 392 ஆம் ஆண்டு இடை நிறுத்தப்பட்டு பின்னர்   1896 ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பமானது.

 வட அமெரிக்காவிலிருந்து  6  ஐரோப்பாவிலிருந்து   16 ஆசியாவிலிருந்து   3 ஓசியானிக் தீவுகளில் இருந்து   2 போட்டிகளுக்கான வீரர்கள் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றுள்ளனர்.

2 comments:

கரிகாலன் said...

நல்லதொரு தகவல் .இலங்கை தகவல்களை கூட இடம்பெற செய்யுங்கள் .நல்ல படங்களை
பதிவிடுங்கள் .நீங்கள் இலங்கையில் இருந்துதானே பதிவிடுகிறீர்கள் ?

வர்மா said...

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.இலங்கை ஒலிம்பிக் தகவல்களைத் தருவதில்லை. ஆகையால் சிரமமாக உள்ளது.
அன்புடன்.
வர்மா