Tuesday, September 12, 2017

உகலக்கிண்ணப் போட்டியில் விளையாட மெக்சிகோ தகுதி பெற்றது.




ரஷ்யாவில் ,2018  ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கான தகுதிகாண் போட்டிகள் கண்டங்கள் வரியாக நடைபெறுகின்றன.வடக்கு,மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் தீவுகள் அடங்கிய நாடுகளிலிருந்து முதல் அணியாக மெக்சிகோ தகுதி பெற்றுள்ளது. மெக்சிகோசிற்றியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பனாமாவுக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு மெக்சிகோ தகுதி பெற்றது. 

வடக்கு,மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் தீவுகள் அடங்கிய நாடுகளிலிருந்து 35 நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின கடைசி ஐந்தாவதுசுற்றில் 
அமெரிக்கா,மெக்சிகோ,பனாமா,கொஸ்ரரிகா,ஹொண்டூராஸ், ரினிடாட் அண்ட் டுபாக்கோ ஆகிய ஆறு நாடுகள் விளையாடுகின்றன. ஏழு போட்டிகளில் விளையாடிய மெக்சிகோ ஐந்து போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகளை சமநிலையில்  முடித்துள்ளது. 17 புள்ளிகளுடன் முதளிடத்ஹ்டில் உள்ளது. மெக்சிகோ 10 கோல்கள் அடித்துள்ளது. எதிராக  2  கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.  

ஹொஸ்ரரிக்காவுக்கு  எதிரான போட்டியில்  2-0 என்ற கோல்கணக்கில் தோற்றதால் அமெரிக்காவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹொஸ்ரரிக்கா 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் அமெரிக்காவும் ஹொண்டூராஸும் தலா 8   புள்ளிகளைப் பெற்று முறையே இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட நேரடியாக தகுதி பெற்றுவிடும். ஏனைய நாடுகளில் ஒன்று   பிளே ஓவ்  சுற்றில் வெற்றி பெற்று தகுதிபெறும்.

 உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் ரஷ்யா நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. பிரேஸில், ஜப்பான்,ஈரான் ஆகியவற்றுடன் ஐந்தாவது நாடாக மெக்சிகோ இடம் பிடித்துள்ளது.



No comments: