Thursday, September 14, 2017

உலகக்கிண்ணப் போட்டியை நடத்த தயாராகிறது இந்தியா




உலகில் உள்ள  பிரபல்யமான விளையாட்டுகளில் உதைபந்தாட்டம் முதலிடத்தில் இருக்கிறது.. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உலகக்கிண்ண உதை பந்தட்டப்போட்டி நடைபெறுவது வழமை. அதேபோல் இளையோருக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளையும் உலக உதைபந்தாட்ட அமைப்பான  ஃபீபா  நடத்துகிறது. இளையோருக்கான 19  வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டி ஒக்டோபர்  6 ஆம் திகதி முதல்  28  திகதி வரை இந்தியாவில்  நடைபெற உள்ளது டில்லி,கெளஹாத்தி,  கொல்கட்டா,மும்பை,கோவா,கொச்சி ஆகிய நகரங்களில் உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டிகள் நடைபெற உள்ளன. ஆரம்ப வைபவமும்   இறுதிப் போட்டியும் டில்லியில் டில்லியில் நடைபெறும்.

உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டியை நடத்தும்நாடான இந்தியா 
 தகுதி பெற்றுள்ளது. இந்திய உட்பட 24 நாடுகள் இப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன
.ஆசியாவில்இருந்துஇந்தியா,ஈரான்,ஈராக்,துருக்கி,தென்.கொரியா,ஜப்பான்,நியூஸிலாந்து, நியூகலடோனியா ஆகியவையும்,



தென்.ஆபிரிக்காவில் இருந்து மாலி,நைஜீரியா,கினியா,கானா ஆகியவையும்,
ஐரோப்பாவில் இருந்து ஜேர்மனி,பிரான்ஸ்,இங்கிலாந்து,ஸ்பெய்ன் ஆகியவையும், 
வட, மத்திய அமெரிக்கா, கரிபியன் தீவுகளில் இருந்து, அமெரிக்கா, மெக்சிக்கோ, ஹொண்டூராஸ், கொஸ்ரரிகா ஆகியவையும்,
தென்.அமெரிக்காவில் இருந்து பிரேஸில்,கொலம்பியா,பரகுவே,சிலி ஆகியவையும்  இதில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன.

இளையோருக்கான இந்த உலகக்கிண்ணப் போட்டி 1985  ஆம் ஆண்டு முதன் முதலாக சீனாவில் நடைபெற்றது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைநடைபெறும்இப்போட்டிஇதுவரைசீனா,கனடா,ஸ்கொட்லாந்து,இத்தாலி,ஜப்பான்,ஈக்குவடோர், பிரேஸில்,நியூஸிலாந்து,திரினிடாட் அண்ட் டுபாக்கோ,பின்லாந்து,பெரு,தென்,கொரியா,நைஜீரியா,மெக்ஸிக்கோ,அமெரிக்கா,சீனா ஆகிய நாடுகளில் நடைபெற்றன. 16   ஆவது போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.  அதிக பட்சமாக சீனா இரண்டு முறை இப்போட்டியை நடத்தி உள்ளது.

இளம் வீரர்களுக்கான 19  வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டியில் நைஜீரியா ஆதிக்கம்  செலுத்துகிறது. ஏழு முறை இறுதிப் போட்டியில் விளையாடிய நைஜீரியா நான்கு முறை சம்பியனாகியது.  இரண்டு முறை தோல்வியடைந்தது. இரண்டாவது இடத்தை பிரேஸில் பிடித்துள்ளது. ஐந்து முறை இறுதிப்போட்டியில் விளையாடிய பிரேஸில் மூன்றுமுறை சம்பியனாகியுள்ளது... இரண்டு முறை தோல்வியடைந்தது. நான்கு   முறை இறுதிப்போட்டியில் விளையாடிய கானா இரண்டு முறை  சம்பியனாகியுள்ளது.. இரண்டு முறை  தோல்வியடைந்தது. இரண்டு முறை இறுதிப் போட்டியில் விளையாடியமெக்ஸிக்கோஒருமுறைசம்பியனாகியது.சோவியத்யூனியன்,சவூதிஅரேபியா,சுவிட்ஸர்லாந்து,  ,பிரான்ஸ் ஆகியன தலா ஒருமுறை சம்பியனாகியுள்ளன.மூன்று  முறை இறுதிப்போட்டியில் விளையாடியும் ஸ்பெய்ன்சம்பியனாகவில்லை.ஜேர்மனி,ஸ்கொட்லாந்து,அவுஸ்திரேலியா,உருகுவே இறுதிப்போட்டியில் விளையாடித் தோல்வியடைந்தன.









இளையோருக்கான முதலாவது உலகக்கிண்ணப் போட்டியில் சம்பியனான நைஜீரியா 2013,2015  ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து சம்பியனாகியது.  நடப்புச்சம்பியன் என்ற அந்தஸ்துடன் நைஜீரியா களம் இறங்க உள்ளது. 24  நாடுகளும் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் நான்கு நாடுகள் இடம் பிடித்துள்ளன.

 A    இந்தியா,   அமெரிக்கா,    கொலம்பியா ,   கானா
B  பரகுவே,    மாலி,        நியூஸிலாந்து,   துருக்கி
C  ஈரான்,      கினியா,        ஜேர்மனி,    கொஸ்ரரிகா 
D  தென்.கொரியா நைஜீரியா,   பிறேஸில்,    ஸ்பெய்ன்
E  ஹொண்டூராஸ், ஜப்பான்,   நியூகலடோனியா, பிரான்ஸ்  
F  ஈராக்,  மெக்ஸிக்கோ, சிலி,  இங்கிலாந்து






No comments: