Friday, September 15, 2017

சூதாட்டத்தில் சிக்கிய நடுவர்




தென் ஆப்பிரிக்கா, செனகல் ஆகியவற்றுக்கிடையேயான    உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தகுதிகாண் போட்டியின் போது மத்தியஸ்தர் ஜோசெப் லம்டி போட்டிகளை நிர்ணயிக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டினை விசாரணை செய்த நடுவர் மன்றம் அவருக்கு வாழ் நாள் தடையினை விதிப்பதற்கு  தீர்மானித்ததை தொடர்ந்து நவம்பர் மாதம் மீண்டும்  போட்டியை  நடத்த பீபா தீர்மானித்துள்ளது.
 
"இந்த போட்டியினை  நவம்பரில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ள நிலையிலும் அதற்கான திகதி இன்னமும் முடிவு செய்யப் படவில்லை" என்று பிபா வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2016  நவம்பர் 12 ஆம் திகதி, அன்று இரு அணிகளுக்கிடையில் நடந்த போட்டியில்,   தென் ஆபிரிக்க அணிக்கு பெனானல்ரி    ஒன்றினை வழங்கியிருந்தார். செனகல் அணியின் முற்காப்பு வீரரான கலிதோவு  கெளலிபாலியின்  கைகளில் பந்துபட்டதாக கூறி நடுவர் ஜோசெப்பினால் பெனால்ரி வழங்கப் பட்டிருந்தது.

தென் ஆபிரிக்காவுக்கு இது  திருப்பு முனையாகியது. .தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஆபிரிக்க வலயத் தெரிவில் இறுதி கட்டத்தில் இதுவரை வெற்றி பெறாத நிலையில் அவர்களுக்கு இது வெற்றிவாய்ப்பினை வழங்கியது.  போட்டியின் வீடியோ பதிவில்   , பந்து கெளபாலிஒயின் முழங்காலில் பட்டு கீழே விழுகிறமை தெளிவாக பதிவாகியுள்ளது.
பீபா ஒழுக்க   மற்றும் மேல்முறையீட்டுக்  சபைகள் நடுவர் ஜோசெப்  லாம்ப்டே மீது ஆயுட்கால தடை விதித்த நிலையில் நடுவர் மன்றமும் இந்த தீர்ப்பினை உறுதிப் படுத்தியுள்ளன. பர்கினா பாசோ , கேப் வெர்டே.யை தொடர்ந்து  ஒரு புள்லி பிந்தங்கிய நிலையில்  செனகல் தற்போது குழுவில் மூன்றாவது இடத்தில்  உள்ளது.

பீபா உலகக் கிண்ண  விதிகளின் படி, உலகக் கிண்ண  தகுதி காண் மீள்போட்டிக்கான முடிவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் செப்டம்பர் 14 அன்று  நடைபெறும்  பீபா போட்டிக் குழுவின் அடுத்த கூட்டத்தில் இது உறுதிப்படுத்தப் படும்.


No comments: