Tuesday, September 26, 2017

மும்பையில் பிரேஸில் அணி





17வது ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான) உலகக்கிண்ண   உதைபந்தட்டப்போட்டி  அடுத்த மாதம் (அக்டோபர்) 6 ஆம்  திகதி  முதல் 28 ஆம் திகதி வரை கொல்கத்தா, கொச்சி, டெல்லி, மும்பை, கவுகாத்தி, கோவா ஆகிய 6 நகரங்களில் நடைபெறும்.   இதில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3வது இடத்தை பெறும் அணிகளில் சிறப்பான 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும். தொடக்க நாளான 6 ஆம் திகதி டெல்லியில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் பிரிவில் இடம் பெற்றுள்ள கொலம்பியா-கானா (மாலை 5 மணி), இந்தியா-அமெரிக்கா (இரவு 8 மணி) அணியும், மும்பையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் பிபிரிவில் இடம் பிடித்துள்ள நியூஸிலாந்து-துருக்கி (மாலை 5 மணி), பராகுவே-மாலி (இரவு 8 மணி) அணியும் மோதுகின்றன.

இந்த நிலையில் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 3 முறை சம்பியனான பிரேஸில் அணி நேற்று காலை மும்பையைச்சென்றடைந்தது. அந்தேரியில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பிரேஸில்  அணி, நியூஸிலாந்துடன் மோதுகிறது. முதல் நாளில் மும்பையில் நடைபெறும் 2 லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் 20 ஆயிரம் விற்பனையாகிவிட்டான.   போட்டி தொடங்க இன்னும் 10 நாட்கள் இருப்பதால் எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் ஸ்டேடியம் மொத்தம் 45,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டதாகும்.

No comments: