Saturday, July 27, 2019

வேகத்தால் மிரட்டிய மலிங்க


கிரிக்கெற் உலகின் தனது வேகமான பந்து வீச்சால் துடுப்பாட்ட வீரர்களைத் திணறடித்த மலிங்க ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். டெஸ்ட், ஒருநாள், ரி20 ஆகியா வற்ரில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டிய மைல்ங்க டெஸ்ட்  போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஒருநாள், ரி20 ஆகியவற்றில் விளையாடினார். 26 ஆம் திகதியுடன் ஒரு நாள் போட்டிக்கு விடைகொடுத்துள்ளார். உச்சத்தில் இருந்த கிறிக்கெற் வீரர்களின் வாழ்க்கை இலகுவானதாக இருக்கவில்லை. அதற்கு மலிங்கவும் விதிவிலக்கல்ல.

இலங்கையின் பல வெற்றிகளுக்கு மலிங்க மிக முக்கியமானவராக விளங்கினார். பரபரப்பான ஒருநாள்,  ரி20 ஆகியவற்றின் முதல் ஓவரில் விக்கெற்களை வீழ்த்தி நம்பிக்கையளித்தார்.  கடைசி ஓவரில் எதிரணியின் வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களைக்  கொடுக்காது இலங்கையை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். மலிங்க விக்கெற்களை வீழ்த்தும்போது ஆனந்தப்பட்டவர்கள், அவர் விக்கெற் வீழ்த்தாதபோது ஆத்திரப்பட்டார்கள். இலங்கையின் சில தோல்விகளுக்கு மலிங்கதான் காரணம் என கூசாது அவரைச் சுட்டிகாட்டி வருத்தப்பட வைத்தனர். இஅவை எல்லவற்றையும் சகித்துக்கொண்ட மலிங்க, தனது பந்து வீச்சால் பதிலளித்தார்.

இலங்கையின் அரசியலும் மலிங்கவை அலைக்களித்தது. மலிங்க ஓய்வுபெற விரும்பியபோது அதர்கு சரியான சந்தர்ப்பத்தை இலங்கை கிரிக்கெற் அவருக்கு வழங்கவில்லை. தொடர்ச்சியான பயிற்சியின் மூலம்   நிரூபித்து மீண்டும் அணியில் இடம்  பிடித்தார்.  2017 ஆம் ஆண்டு இலங்கை கிறிக்கெற் அணியில் இருந்து மலிங்க நீக்கப்பட்டார். அப்போது அவர் உடல்தகுதியுடன் இருந்தார். மலிங்க இல்லாமல் வெற்றி பெறலாம் என இலங்கை நிர்வாகம் கருதியது.  கடந்த வருடம் ஆசியக்கிண்ணப் போட்டியில் மலிங்க, அணியில் சேர்க்கப்பட்டார். பங்களாதாஷுக்கு எதிரான முதல் போட்டியில் 24 ஓட்டங்கலைக்கொடுத்து நான்கு விக்கெற்களை வீழ்த்தி தனது வருகையை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் வெறிகொண்ட வீரனாக அனைட்துப் போட்டிகளிலும் தனது முத்திரையைப்  பதித்தார். மலிங்க ஓய்வு பெற்ற பிறேமதாஸ மைதானத்தில் மூன்று முறை ஹட்ரிக் சாதனை செய்தார். உலகக் கிண்ணத்தொடரில் தொடர்களில் இரு முறை ஹாட் டிரிக் சாதனை செய்த ஒரே வீரர்.. 
  
35 வயதான மலிங்க, இலங்கை அணிக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெற்களும், 225 ஒருநாள் போட்டிகளில் 335 விக்கெற்களும்   73- ரி20 போட்டிகளில் 97 விக்கெட்ற்களும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 3 முறையும், ஒருநாள் போட்டிகளில் 8 முறையும், ரி 20, ஐபிஎல் போட்டிகளில் ஒரு முறையும் 5 விக்கெற்களை வீழ்த்தியுள்ளார். 122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மலிங்கா, அந்த அணியின் ஆஸ்தான வீரராக திகழ்கிறார்.

2004 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியின் பின்னர்  ஓய்வுபெற்றார். 2004 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமான மலிங்க, இப்போது பங்களாதேஷுக்கு எதிரான போட்டியுடன் ஓய்வுபெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ரி-20 போட்டியில் அறிமுகமான மலிங்க, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரி-20  போட்டியுடன் ஓய்வுபெற விரும்புகிறார்.

  திறமையான துடுப்பாட்ட வீரரும் பந்து வீச்சாளரும்  இல்லாமல் இலங்கை அணி தடுமாறுகிறது. இந்த இந்நிலையில் மலிங்கவின் ஓய்வு இலங்கைக்கு மிகபெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது.

No comments: