லோட்ஸ்
மைதானத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண கிறிக்கெற் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில்
எட்டு விக்கெற்களை இழந்து 241 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில்
சகல விக்கெற்களையும் இழந்து 241 ஓட்டங்கள் எடுத்தது. உலகக்கிண்ண இறுதிப்போட்டி
வெற்றி தோல்வியின்றி சம நிலையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் வரை சென்றது சூப்பர்
ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 15 ஓட்டங்கள் அடித்தது. 16 ஓட்ட வெற்றி
இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து 15 ஒட்டங்கள் எடுத்ததால் போட்டி சம நிலையில் முடிந்தது.
50 ஓவர்களில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து சம்பியனாகியது. இங்கிலாந்து
22 பவுண்டரிகளும் நியூஸிலாந்து 14 பவுண்டரிகளும்
அடித்தன.
சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து
3,2 ,4,1,2,4 ஓட்டங்கள் அடித்தது. இங்கிலாந்தின்
முதல் பந்து வைடாக வீசப்பட்டதால் ஒரு ஓட்டம் கிடைத்தது நியூஸிலாந்து 2,6,2,2,4 ஓட்டங்கள்
எடுத்தது.
உலகக்கிண்ணப்
போட்டித் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட
வீரர்கள் இறுதிப்போட்டியிலும் ஏமாற்றினார்கள்.
மாட்டின் கப்தில் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெற்றில் இணைந்த நிக்கோலஸும்
வில்லியம்ஸனும் பொறுமையாக விளையாடினார்கள். வோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோரின் முதல் 10 ஓவர்களில்
33 ஓட்டங்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. மார்க் வுட்,பிளங்கட், ரஷீட் ஆகியோரின் ஓவர்களைக் குறிவைத்து ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். அடுத்த 10 ஓவர்களில்
விக்கெற் இழக்காமல் 58 ஓட்டங்கள் எடுத்தனர்.
நியூஸிலாந்தின்
ஓட்ட எண்ணிக்கை உயர்ந்த நேரத்தில் 30 ஓட்டங்கள் அடித்த வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெற்றில் ஜோடி சேர்ந்த வில்லியம்ஸன்,
நிக்கோலஸ் ஓடி அதிக பட்சமாக 74 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்தின் பந்து வீச்சினால் நியூஸிலாந்து வீரர்களால்
அதிரடியாக ஆட முடியவில்லை. அவர்களால் இரண்டு சிக்சர்களும் 14 பவுண்டரிகளும் மட்டுமே
அடிக்க முடிந்தது.
அதிரடியாக விளையாடிய நிகோலஸ் 55 ஓட்டங்களில் வெளியேறினார்.
ராஸ் டெய்லர் 15, ஜேம்ஸ் நீஷம் 19, கிராண்ட ஹோம் 16, ஹென்றி 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க நியூஸிலாந்துன்
துடுப்பாட்ட வரிசை சரிந்தது. லாதம் மட்டும்
47 ஓட்டங்கள் எடுத்தார்.
50
ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்த நியூசிலாந்து 241 ஓட்டங்கள் எடுத்தது. வோக்ஸ், பிங்கெட் ஆகியோர் தலா மூன்று விக்கெற்களையும்
ஆர்ச்சர், மாக் வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.
242 எனும் வெற்றி
இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து வீரர்கள்,
நியூஸிலாந்தின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது தடுமாறினர். ஹென்ரியின் பந்து வீச்சில் 17 ஓட்டங்கள் எடுத்த
ராய். ஆட்டமிழந்தார். 9 ஆவது ,10 ஆவது, 11 ஆவது ஓவர்களில் ஓட்டம் எதுவும் எடுக்கப்படாமையால்
இங்கிலாந்து வீரர்கள் பதற்றமடைந்தனர். இந்த நெருக்கடியில் 30 பந்துகளில் 7 ஓட்டங்கள்
எடுத்த ரூட், ரூட் ஆட்டமிழந்தார். மற்றைய ஆரம்பத்
துடுப்பாட்ட வீரரான பேர்ஸ்டோ 36 ஓட்டங்களிலும்,
மார்கன் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
23.2
ஓவரில் நான்கு விக்கெற்களை இழந்த இங்கிலாந்து 86 ஓட்டங்கள் எடுத்தபோது ஜோடி சேர்ந்த
பென் ஸ்டொக்ஸும், படலரும் நியூஸிலாந்தின் பக்கம்
இருந்த வெற்றியை தம் பக்கம் திருப்பினர்.இவர்கள் இருவரும் இணைந்து அடித்த 110
ஓட்டங்களால் இங்கிலாந்து வீரர்கள் நம்பிகையடைந்தனர்.
59 ஓட்டங்கள் அடித்த படலர் ஆட்டமிழந்ததும் வெற்றிக்காற்று நியூஸிலாந்தின் பக்கம் வீசத்தொடங்கியது.
பென் ஸ்டொக்சின் அனுபவ ஆட்டத்தால் போட்டி சமனானது. பென்ஸ்டொக்ச் ஆட்டமிழக்காமல் 84
ஓட்டங்கள் அடித்தார்.
No comments:
Post a Comment