கொழும்பு
பிறேமதாஸ மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்து விளையாடிய
இலங்கை வெற்றி பெற்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியது. நாண்யச்சுழ்ற்சியில் வெற்ரி பெற்ற
பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 238 ஓட்டங்கள்
எடுத்தது. இலங்கை அணி 44.4 ஓவர்களில் மூன்று விக்கெற்களை இழந்து242 ஓட்டங்கள் அடித்த்
ஏழு விக்கெற்களால் வெற்றி பெற்றது. 2015ஆம்
ஆண்டிற்கு பின்னர்
முதல் தடவையாக
சொந்த மண்ணில்
இடம்பெற்ற ஒருநாள்
தொடர் ஒன்றில்
இலங்கை வெற்றி
பெற்றது.
வேகப்பந்துவீச்சாளர் ருபெல் ஹொஸைனிற்கு
பதிலாக தய்ஜூல்
இஸ்லாம் பங்களாதேஷ் அணியில் இடம் பிடித்தார். மலிங்க,
திசர பெரேரா ஆகியோருக்குப் பதிலாக அகில
தனன்ஜய, இசுரு உதான ஆகியோர்
இலங்கை அணியில்
சேர்க்கப்பட்டனர்.
பங்களாதேஷ் அணியின்
ஆரம்ப துடுப்பாட்ட
வீரராக வந்த
சௌம்யா சர்க்கார்
11 ஓட்டங்களுடன்
நுவன் பிரதீப்பின்
பந்து வீச்சில்
ஆட்டமிழந்தார். பங்களாதேஷ் அணியின்
தலைவரும் ஆரம்ப
துடுப்பாட்ட வீரருமான தமிம் இக்பால் 19 ஓட்டங்களுடன்
வெளியேறினார். மொஹமட் மிதுன்
11, மஹமதுல்லா 6 சப்பீர்
ரஹ்மான்
11 , மொசாதிக் ஹுசைனும் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனால், பங்களாதேஷ்
117 ஓட்டங்களுக்கு
6 விக்கெற்களை இழந்தது
ஏழாம் விக்கெட்டுக்காக
ஜோடி சேர்ந்த
முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹஸன் ஜோடி
84 ஓட்டங்களை எடுத்து
ஆறுதலளித்தது. மெஹிதி ஹஸன்
43 ஓட்டங்கள் எடுத்தார். பங்களாதேஷ் அணி, 50 ஓவர்கள்
நிறைவில் 8 விக்கெற்க்களை இழந்து 238 ஓட்டங்கள் எடுத்தது.
முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில்
6 பௌண்டரிகள் , ஒரு சிக்ஸர் அடங்கலாக
98 ஓட்டங்களை எடுத்தார். இரண்டு ஓட்டங்களால்
சதத்தை தவறவிட்ட முஷ்பிகுர் ரஹீம்
இந்த ஒருநாள்
தொடரில் தொடர்ச்சியாக
இரண்டாவது அரைச்சதத்தினை
பதிவு செய்தார். இலங்கை அணி வீரர்களான அகில தனன்ஜய, இசுரு
உதான ,நுவன்
பிரதீப் ஆகியோர்
தலா 2 விக்கெட்டுக்களை
வீழ்த்தினர்.
இலங்கை அணிக்கு
ஆரம்ப துடுப்பாட்ட
வீரர்களாக அவிஷ்க
பெர்னாந்து , திமுத் கருணாரத்ன ஆகியோர்
களம் இறங்கினர்.
அணியின் தலைவரான
திமுத் கருணாரத்ன
15
ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக
விளையாடிய அவிஷ்க பெர்னாண்டோ 2 சிக்ஸர்கள்,
9 பௌண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்களை அடித்தார். குசல் ஜனித் பெரேரா
30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
குசல் மெண்டிஸ்
, அஞ்செலோ மத்தியூஸ்
ஜோடி மூன்றாம்
விக்கெட்டுக்காக 96 ஓட்டங்களை எடுத்தது. 44.4 ஓவர்களில்
3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து
242 ஓட்டங்களுள் அடித்து இலங்கை வெற்றி பெற்றது. அஞ்செலோ
மத்தியூஸ் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ்
ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் அடித்தனர்.
.
போட்டியின் ஆட்டநாயகனாக அவிஷ்க
பெர்னாண்டோதெரிவாகினார்.
இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இந்த ஒருநாள்
தொடரில் வெற்றி
பெற்றிருக்கும் இலங்கை அணி, . இலங்கை
– பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின்
மூன்றாவதும் கடைசியுமான போட்டி எதிர்வரும் 31 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு ஆர்.
பிரேமதாச மைதானத்தில்
நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment