Saturday, September 12, 2020

ஐபிஎல் வரலாற்றில் அறிமுகமாகும் அமெரிக்க வீரர்

 


ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த அலி கான் இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் 13-வது ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வேகப்பந்துவீச்சாளரான அலி கான், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஹேரி குர்னிக்கு பதிலாக சேர்க்கப்பட உள்ளார்.  குர்னேவுக்கு தோள்பட்ட காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக முகமது ஹசன் அலிகான் சேர்க்கப்பட உள்ளார். ஐபிஎல் நிர்வாகத்தின் அனுமதிக்காக கொல்கத்தா நைட்ரைடர் அணி நிர்வாகம் காத்திருக்கிறது.

ஐபிஎல் நிர்வாகம் ஒருவேளை கான் வருகைக்கு சம்மதம் தெரிவித்தால், ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள முதல் அமெரிக்க வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.

அலி கான் ஏற்கெனவே கரீபியன் லீக் ரி20 தொடரில் பொலார்ட் கப்டனாக இருந்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தவர். இந்த தொடரில் அலி கான் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, எகானமி ரேட்டை 7.43 சதவீதமாக வைத்துள்ளார். யார்கர் வீசுவதில் நல்ல தேர்ச்சி பெற்றவர்.

வரும் 23-ம் திகதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது

கடந்த ஐபிஎல் தொடரின் போது கொல்கத்தா அணி அலி கானை எடுக்க முயன்று முடியவில்லை. குளோபல் கனடா ரி20 போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசி அனைவரின் கவனத்தையும் அலி கான் ஈர்த்தார்.

இதையடுத்து அலி கானின் திறமையை கண்ட மே..தீவுகள் வீரர் டுவைன் பிராவோ, கரீபியன் லீக் தொடருக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

கடந்த சிபிஎல் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் இடம் பெற்று 12 விக்கெட்டுகளை அலி கான் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: