ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை மும்பைய எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது.
10 நாட்களில் இரண்டு போட்டிகளில் நடைபெறுகின்றன. முதல் போட்டி 3.30 மணிக்கும், 2-வது போட்டி 7.30 மணிக்கும் நடபெறுகிறது. ப்ளே ஆப் சுற்று நடக்கும் நகரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ வெளியிட்ட அட்டவணையில் ரவுண்ட் ராபின் போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் 19-ஆம் திகதி முதல் 46 நாட்களில் 56 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் 10 நாட்களில் இரு ஆட்டங்கள் நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 13வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் வருகிற 19 - ஆம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக அமீரகம் சென்றுள்ள 8 அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கி விட்டன.

No comments:
Post a Comment