Saturday, September 12, 2020

ஆறு மொழிகளில் ஒளிபரப்பாகும் ஐபிஎல்


 

.பி.எல். போட்டியை டிஜிட்டலில் ஒளிபரப்புவதால் விளம்பரம் மூலம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்கு ரூ.2000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13-வது .பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் திகதி முதல் நவம்பர் 10-ந் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்த போட்டியை ஸ்டார் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அதிக அளவில் இந்த போட்டியை டெலிவிஷனில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல .பி.எல். போட்டி டிஜிட்டலிலும் ஒளிபரப்பாகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த போட்டியை நேடியாக காணலாம்.

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் .பி.எல். போட்டி 6 மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரசிகர்கள் போட்யின் வர்ணனையை கேட்க முடியும்.

.பி.எல். போட்டிக்காக ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் ஹாட்ஸ்டார் நிறுவனம் பல்வேறு சலுகைகளையும் அளித்துள்ளது.

.பி.எல். போட்டியை டிஜிட்டலில் ஒளிபரப்புவதால் விளம்பரம் மூலம் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துக்கு ரூ.2000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியை நேடியாக ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு 95 சதவீத விளம்பரங்கள் பதிவாகி விட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஒளிபரப்பு செய்யும் நேரத்தைவிட தற்போது கூடுதலாக 30 நிமிட நேரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. போட்டிக்கு முன்னதாக நடைபெறும் அலசல் குறித்த விவாதம் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments: