அபுதாபியில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் மோதியது.நானயச்சுழற்சியின் வெற்றி பெற்ற கொல்கட்ட கப்டன் மும்பையை துடுப்பெடுத்தாடும்படி பணித்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்கள் சேர்த்தது. 196 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 49 ஓட்டங்களால்தோல்வி அடைந்தது.
மும்பை அணியின் ஆரம்பத்துடுபாட்ட வீரன்குயின்டான் டி கொக், ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் ஷிவம் மாவியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்து, அதிரடியாக விளையாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். மும்பையின் 98 ஓட்டங்கள் எடுத்தபோது சூர்யகுமார் யாதவ் (47 ஓட்டங்கள், 28 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார். இருவரும் சேர்ந்து 2-வது விக்கெட்டுக்கு 139 ஓட்டங்கள் அடித்து வெற்றிக்கு அடித்தளமிட்டனர். அடுத்து வந்த சவுரப் திவாரி 21 ஓட்டங்களில் வெளியேறினார்.
மறுமுனையில் ரோஹித் 37-வது அரைசதத்தை கடந்தார் அதிரடியில் மிரட்டிய ரோஹித் சர்மா 80 ஓட்டங்களில் (54 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டம் இழந்தார். ஷிவம் மாவி புல்டாசாக வீசிய பந்தை தூக்கியடித்த போது சிக்கினார். பின்னர் ஹர்திக் பாண்ட்யா (18 ரஓட்டங்கள்), பொல்லார்ட் ( ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்கள் ) ஆகியோரின் கடைசிகட்ட பங்களிப்புடன் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்கள் அடித்தது.
கொல்கத்தா தரப்பில் ஷிவம் மாவி 2 விக்கெட்களும், சுனில் நரின், ரஸ்செல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஏலத்தில் ரூ.15½ கோடிக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 3 ஓவர்களில் 49 ஓட்டங்களை அள்ளி கொடுத்தாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.
196 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, பும்ரா, டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் உள்ளிட்ட மும்பை வீரர்களின் துல்லியமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அபாயகரமான வீரர்களான ஆந்த்ரே ரஸ்செல் (11 ஓட்டங்கள்), மோர்கன் (16 ஓட்டங்கள்) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக கம்மின்ஸ் 4 சிக்சருடன் 33 ஓட்டங்களும், கப்டன் தினேஷ் கார்த்திக் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 146 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோற்று இருந்தது.
54 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உடன் 80 ஓட்டங்கள் அடித்த கப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
சிஎஸ்கே அணிக்கு எதிரான தோல்வியால் நெருக்கடிக்கு ஆளாகி இருந்த ரோஹித் சர்மா இந்த வெற்றி மூலம் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்திருந்தது. அந்த தோல்விகளுக்கு இந்தப் போட்டி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது மும்பை அணி.
* மும்பை அணியின் கப்டன் ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் அடித்த 6 சிக்சர்களையும் சேர்த்து அவரது ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டிய 4-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். அதிக சிக்சர் விளாசியவர்களில் கிறிஸ் கெய்ல் (326 சிக்சர்), டிவில்லியர்ஸ் (214), டோனி (212) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.
* ஐ.பி.எல்.-ல் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா நேற்று படைத்தார். அவர் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 904 ஓட்டங்கள் சேர்த்து இருக்கிறார். இந்த வகையில் 2-வது இடத்தில் உள்ள ஐதராபாத் கப்டன் வார்னர் கொல்கத்தாவுக்கு எதிராக 829 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
No comments:
Post a Comment