Monday, November 9, 2020

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது டெல்லி

 

 அபுதாபியில் நடைபெற்ற   இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி   ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் விளையாட டெல்லி தகுதி பெற்றது.  

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.  டெல்லி அணியின் சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிகர் தவான் ஆகியோர்  களமிறங்கினர்மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தார்.


 

இந்த ஜோடியின் அதிரடியான துவக்கத்தால் அணியின் ஓட்ட எண்ணிக்கை  வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோய்னிஸ் 38(27) ஓட்டங்ககளில் விக்கெட்டைப் பரிகொடுத்தார். அடுத்ததாக கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், தவானுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஷிகர் தவான் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார் 

  ஜோடியில் ஸ்ரேயாஸ் அய்யர் 21(20) ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் அதிரடியில் கலக்கினார். இதனால் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 78(50) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.


 

இறுதியில் ரிஷாப் பாண்ட் 2 (3) ஓட்டங்களும், அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 42(22) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

 டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா, ஹோல்டர், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.   டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணிக்கு 190 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

  190 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி களமிறங்கியது


 

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 2 ஓட்டங்களில் வெளியேறினார்.மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ப்ரியம் கார்க் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்து  வெளியேறிய நிலையில், அடுத்து வந்த மனீஷ் பாண்டெ 21 ஓட்டங்களில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.  அணியின் ரன்வேகம் சற்று குறைந்த நேரத்தில் கனே வில்லியம்சன்(67 ஓட்டங்கள்) அதிரடியாக ஆடி ரன் வேகத்தை உயர்த்தினார். 

மறுமுனையில் ஜேசன் ஹோல்டர்(11), அப்துல் சமத்(33), ராஷீத் கான்(11) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு  முதன் முறையாக முன்னேறியுள்ளது

No comments: