துபாயில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கப்டன் ஸ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் 40 ஓட்டங்களில் வெளியேறினார். கப்டன் ரோகித் சர்மா எல்.பி.டபில்யூ. முறையில் ஓட்டம் எடுக்காது ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய இருவரும் அரை சதத்தைக் கடந்தனர்.
சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசி 51 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷன் 30 பந்துகளில் 55ஓட்டங்கள் குவித்தார். களத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 14 பந்துகளில் 37 ஓட்டங்கள் அடித்தார்
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 200ஓட்டங்கள் எடுத்தது. மும்பையின் கதை முடிந்தது எஅ டெல்லி ரசிகர்கள் நினைத்த போது கடைசி ஆறு ஓவர்களில் 92 ஓட்டங்கள் எடுத்து 200 எனும் இமாலய இலக்கை எட்டியது மும்பை.
. இதையடுத்து 201 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. ஆனால் டெல்லி அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை. முதல் 2 ஓவர்களிலேயே ப்ரித்வீஷா, ஷிகர் தவான், ரஹானா ஆகிய மூன்று பேரும் ஓட்டம் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.
2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்ததால் டெல்லி அணி சற்று தடுமாறியது. இதை மும்பை அணி பந்துவீச்சாளர்கள் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டனர். பவர்-ப்ளே முடிவதற்குள் 32 ஓட்டங்களில் 4 விக்கெட்டுகள் சரிந்தன. டெல்லி அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 65 ஓட்டங்களும், அக்ஸர் படேல் 42 ஓட்டங்களும் குவித்தனர்.
6 ஆவது விக்கெட்டில் இணைந்த மும்பையின் பண்டையா-இஷன் கிஷான் ஜோடி 60 ஓட்டங்கள் எடுத்தது. 6 ஆவது டெல்லியி ஸ்ரொன்க்ஸ் அசார் பட்டேல் ஜோடியும் 60 ஓட்டங்கள் எடுத்தது
மும்பை பந்துவீச்சாளர் பும்ரா 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெடுகள் எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரு ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்துவீச்சாளர்(27 விக்கெட்டுகள்) என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்கள் எடுத்தது இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
No comments:
Post a Comment