தர்மசாலாவில்
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இங்கிலாந்து, இந்தியா
ஆகியவற்றுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட்
போட்டியில் இந்திய சுழற்பந்து வீரர் ரவிச்சந்திரன்
அஷ்வின், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஜானி
பேர்ஸ்டோவ் ஆகியோர் தமது 100 ஆவது டெஸ்ட் போட்டியில்
விளையாடுகின்றனர்.
இங்கிலாந்து
அணியின் முன்னாள் கப்டன் மைக்கேல்
அதர்டன் , அலெக் ஸ்டீவர்ட் ஆகியோர்
2000 ஆம் ஆண்டு ஓல்ட் ட்ராஃபோர்டில்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதன்
முதலாக தமது 100 ஆவது
டெஸ்ட் போட்டியில் இணைந்து விளையாடினார்கள்.
தென்னாப்பிரிக்காவின் ஜக் கலிஸ், ஷான் பொலக் , ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகிய மூன்று வீரர்கள் 2006 இல் செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து ஆகியவற்றுக்கிடையிலான போட்டியின்போது தங்களின் 100வது டெஸ்டில் விளையாடினர்.
2013 இல் பெர்த்தில்
நடந்த இங்கிலாந்துஅவுஸ்திரேலியா ஆஷஸ் போட்டியில் அலஸ்டர்
குக் , மைக்கேல் கிளார்க் ஆகிய இருவரும்
தமது 100 ஆவது டெஸ்ட் போட்டியில்
விளையாடினர்.
இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் தொடங்கி ஒரு நாள் கழித்து, நியூசிலாந்து கப்டன் டிம் சவுத்தி ,கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது தங்கள் 100வது டெஸ்டில் ஒன்றாக விளையாடுகின்றனர்.
No comments:
Post a Comment