Friday, March 29, 2024

523 ஓட்டங்கள் 38 சிக்ஸர்கள் ஹைதராபாத் உலகசாதனை

ஹைதராபாத்தில்  நடைபெற்ற  மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான  போட்டியில் சன் றைசஸ் ஹைதராபாத் 31 ஓட்டங்களால்   ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

  முதலில் துடுப்பெடுத்தாடிய   ஹைதராபாத்  20 ஓவர்களில்  3 விக்கெட்களை இழந்து  277  ஓட்டங்கள் எடுத்தது.   278ஓட்டங்களைத் துரத்திய மும்பை   20 ஓவர்களில்  5 விக்கெட்களை  இழந்து 246  ஓட்டங்கள் எடுத்தது.   சன் ரைசர்ஸ் ஹைதராபாத் : 277/3, மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக, 2024* (ஐபிஎல்),மெல்போர்ன் ஸ்டார்ஸ் : 273/2, ஹோபார்ட் ஹரிகேன்ஸ்க்கு எதிராக, 2022 (பிக்பேஷ்) , டைட்டன்ஸ் : 271/3, நைட்ஸ் அணிக்கு எதிராக, 2022 (சிஎஸ்ஏ டி20)

ஹைதராபாத் 277, மும்பை 246  ஓட்டங்கள்  என  இரண்டு  அணிகளும் சேர்ந்து மொத்தம் 523  ஓட்டங்கள் குவித்தன. இதன் வாயிலாக 17 வருட ஐபிஎல் வரலாற்றில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதல் போட்டி என்ற சாதனையை இப்போட்டி படைத்தது.  2010 ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் 469 ஓட்டங் கள் அடிக்கப்பட்டதே முந்தைய அதிகபட்சமாகும். அதை விட ஒட்டுமொத்த ரி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் (523) அடிக்கப்பட்ட போட்டி என்ற உலக சாதனையும்   ஹைதராபாத் – மும்பை ஆட்டம் படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2023இல் செஞ்சூரியன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா , மேற்கி இந்திய   அணிகள் மோதிய போட்டியில் 517 ஓட்டங்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும்.

ஹைதராபாத் 18, மும்பை 20 என 2 அணிகளும் சேர்ந்து மொத்தம் 38 சிக்ஸர்கள் அடித்தன. ரி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட போட்டி என்ற உலக சாதனையும் ஹைதராபாத் – மும்பை ஆட்டம் படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2018 ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் பால்க் – காபூல் அணிகள் மற்றும் 2019 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஜமேக்கா – செயின்ட் கிட்ஸ் அணிகள் மோதிய போட்டியில்   37 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும்.

ஐபிஎல் வரலாற்றிலும் அதிக சிக்சர்களை அடிக்கப்பட்ட போட்டியாக இப்போட்டி சாதனை படைத்தது. இதற்கு முன் 2018இல் சென்னை – பெங்களூரு, 2020இல் சென்னை – ராஜஸ்தான், 2023இல் சென்னை – பெங்களூரு அணிகள் மோதிய 3 போட்டிகளில் தலா 32 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும்.

No comments: