ஒலிம்பிக் கோடைகால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற ஏழு விளையாட்டு வீரர்கள் தமது தாய் நாட்டில் இருந்து வேறு நாட்டுக்கு மாறுவதற்கான கோரிக்கைக்கு சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு ஒப்புதலளித்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை லொசானில் நடந்த ஐஓசி நிர்வாக
குழு கூட்டத்தில் ஒலிம்பிக்
சாசனத்தின் 41 வது பிரிவின் அடிப்படையில்
இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடு மாறும்
ஒலிம்பிக் வீரர்களின் விபரம்.
Chahrazed Ayachi - மல்யுத்தம் - பிரான்சிலிருந்து துனிசியா வுக்கு
அனஸ்தேசியா
கிர்பிச்னிகோவா - நீச்சல் - ரஷ்யாவிலிருந்து பிரன்ஸுக்கு
அலெக்சாண்டர்
கோமரோவ் - மல்யுத்தம் - ரஷ்யாவிலிருந்து சேர்பியா வுக்கு
ரேச்சல்
நெய்லன் - சைக்கிள் ஓட்டுதல் அவுஸ்திரேலியாவிலிருந்து அயர்லாந்துக்கு
Lisa Pou - நீச்சல் - பிரான்சிலிருந்து மொனாக்கோவுக்கு
லெவேனியா
சிம் - நீச்சல் - அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு
Ingrid Simão Souto Maior - ஜிம்னாஸ்டிக்ஸ் பிறேஸிலில் இருந்து போத்துகலுக்கு
கடந்த காலங்களில் நாடு மாறும் அளவுகோல்கள் மிகவும் மென்மையாக இருந்தன, சில விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை அதிகரிக்க அல்லது மற்றொரு நாட்டில் அதிக வெற்றியை அடைய இரட்டை தேசியத்தைப் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்கினர். இன்று இந்த மற்றம் மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment