Saturday, March 23, 2024

சென்னைக்கு சவால் விட்ட கார்த்திக் அனுஜ் ராவத் ஜோடி



 சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற   2024 ஆம் ஆண்டின் முதலாவதி ஐபிஎல் போட்டியில் ம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் , ரோயல் சலஞ்ச் பெங்களூருவை 5 விக்கெற்களால்  தோற்கடித்து வெற்றியுடன் துவக்கியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  பெங்களூரு   நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று  முதலில் துடுப்பெடுத்தாடி  20 ஓவர்களில் 174 ஓட்டங்கள் எடுத்தது. 176  ஓட்டங்கள்  என்ற வெற்றி இலகுடன் களம் இறங்கிய சென்னை 18.4 ஆவது ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்கள் சேர்த்து இலக்கை எட்டியது.

11.4  ஓவர்களில்  5 விக்கெற்களை இழந்து தடுமறிய  பெங்களூரு 78  ஓட்டங்கள் எடுத்தபோது  ஆற்றாவது விக்கெற்றில் ஜோடி சேர்ந்தசேர்ந்த  தினேஷ்  கார்த்திக், அனுஜ் ராவத் ஆகியோர் நிதானமாக  ஓட்டங்களைச் சேர்த்தும், இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடியும் அணியை 173  ஓட்டங்கள் என்ற கௌரவமான ஸ்கோருக்கு கொண்டு சென்றனர்.

கோலி 21, டுபிளசிஸ் 35, கமரூன் கிறீன் 18, அனுஜ் ராவத்  ஆட்டமிழக்காமல் 48, தினேஷ் கார்த்திக்  ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்கள் எடுத்தனர்.  4  ஓவர்கள் பந்துவீசிய  முஸ்தபிசுர் ரஹ்மான் 29 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெற்களைக் கைப்பற்றினார். கடைசியாக 2008 ஆம் ஆண்டு பெங்களூர் அணி சி எஸ் கே வை சேப்பாக்கம் மைதானத்தில் வென்றது.

   சென்னைக்கு ரச்சின் ரவீந்தரா 37, ரகானே 27, சிவம் துபே 34*, ஜடேஜா 25* ஓட்டங்கள்  எடுத்தனர்.  12.3 ஆவது  ஓவரில்  4  விக்கெற்களை இழந்த சென்னை 110 ஓட்டங்கள் எடுத்தபோது   ஜோடி சேர்ந்த சிவம் துபே , ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வெற்றி இலக்கை எட்டியது.

  நான்கு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி கப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி காட்டியுள்ளார்வெளிநாட்டு வீரர்களான ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்சல், முஷ்டபிஸுர் ரஹ்மான் ஆகியோருக்கும்  இந்திய வீரரான சமீர் ரிஸ்வியும் அறிமுகமாகியுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயத்தை சந்தித்த அவர் எழுந்து நடக்க முடியாமல் ஸ்ட்ரெச்சரில் சென்றார். ‍  அதனால் மருத்துவமனைக்கு சென்ற அவர் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் பெரியளவில் காயத்தை சந்திக்காததால் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல்பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

சென்னை அணியின் 16 வருட சாதனை

பெங்களூரு அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் 16 வருடங்களாக தோற்காமல் இருந்து வரும் கௌரவ சாதனையையும் சென்னை தக்க வைத்துக் கொண்டது. வரலாற்றில் முதலும் கடைசியுமாக 2008இல் ராகுல் ட்ராவிட் தலைமையிலான பெங்களூருவிடம் சேப்பாக்கத்தில் டோனி தலைமையிலான சென்னை தோற்றது. ஆனால் அதன் பின் விளையாடிய 8* போட்டிகளிலும் பெங்களூருவை தோற்கடித்துள்ள சென்னை சேப்பாக்கத்தை தங்களுடைய கோட்டையாக வைத்துள்ளது.

                          குமார் சங்ககாரவை முந்திய டோனி

  சென்னை அணியின் கப்டன்ஷிப் பதவியை ருதுராஜிடம் ஒப்படைத்த ஜாம்பவான் எம்எஸ் டோனி  விக்கெட் கீப்பராக விளையாடி 2 கேட்ச், 1 ரன் அவுட் செய்து அசத்தினார்.

 இந்த போட்டியில் களமிறங்கியதன் வாயிலாக ரி20 கிரிக்கெட்டில் மிகவும் அதிக வயதில் விக்கெட் கீப்பராக விளையாடிய வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்: 1. எம்எஸ் டோனி : 42 வருடம் 259 நாட்கள், சிஎஸ்கே அணிக்காக, 2024*

2. குமார் சங்ககார : 42 வருடம் 115 நாட்கள், எம்சிசி அணிக்காக, 2020 3. ஜலட் கான் : 41 வருடம் 287 நாட்கள், ஹிந்துகுஷ் அணிக்காக, 2022

4. இர்விங் ரோஜார்ஸ் : 41 வருடம் 255 நாட்கள், அங்குயிலா அணிக்காக, 2006

5. ஆடம் கில்கிறிஸ்ட் : 41 வருடம் 183 நாட்கள், பஞ்சாப் அணிக்காக, 2013

சென்னையில் கார்த்திக்கின் கடைசிப் போட்டி?

38 வயதை கடந்துள்ள தினேஷ்கார்த்திக் இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக செய்திகள் வெளியானது. எனவே சொந்த ஊரான சேப்பாக்கத்தில் இதுவே உங்களுடைய கடைசி போட்டியா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

 “இது சிறப்பான கேள்வி. இருப்பினும் இது கடைசிப் போட்டியாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். ஏனெனில் பிளே ஆஃப் சுற்றின் சில போட்டிகள் இங்கே நடைபெற உள்ளது. ஒருவேளை அதில் நான் மீண்டும் விளையாட வந்தால் அதுவே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கலாம். இல்லையென்றால் இதுவே கடைசிப் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்”  என்றார்.

சின்னத்தல ரெய்னாவின் சாதனை முறியடிப்பு

  நியூசிலாந்தை சேர்ந்த 24 வயது இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா சென்னை அணிக்காக அறிமுகமாக களமிறங்கினார்.  3 பவுண்டரி 3 சிக்சரை தெறிக்க விட்டு 37 (15) ஓட்டங்களை 246.66 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் தனது அறிமுகப் போட்டியிலேயே (குறைந்தபட்சம் 30 ஓட்டங்கள்) அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் 16 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு மொஹாலியில் பஞ்சாப்புக்கு எதிராக சென்னை வரலாற்றின் தன்னுடைய முதல் போட்டியில்  களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 32 (13) ஓட்டங்களை 246.15 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக ஃபீல்டிங் துறையிலும் 2 அபாரமான   பிடிகளை எடுத்தரச்சின் அறிமுகப் போட்டியில் அசத்தினார் என்றே சொல்லலாம்.


                 விராட் கோலியின் பிரமாண்டமான சாதனை 

 சர்வதேச, உள்ளூர் ரி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 12000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார் விராட் கோலிவிராட் கோலி 6 ஓட்டங்களை கடந்த போது இந்த பிரம்மாண்ட சாதனையை படைத்தார். மேலும், இந்தப் போட்டியில் 21 ஓட்டங்கள் எடுத்த கோலி சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ஓட்டங்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் செய்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே 12000 ரி20 யில்  12000 ஓட்டங்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார்.

மேலும் உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் கிறிஸ் கெயில், சோயப் மாலிக், கீரான் பொல்லார்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் இந்த மைல்கல் சாதனையை செய்துள்ளனர். அதே சமயம், குறைந்த இன்னிங்ஸ்களில் 12000 ஓட்டங்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார் விராட் கோலி. ரி 20களில் குறைந்த இன்னிங்ஸ்களில் 12000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் - 345 இன்னிங்ஸ் - கிறிஸ் கெய்ல்

360 இன்னிங்ஸ் - விராட் கோலி

368 இன்னிங்ஸ் - டேவிட் வார்னர்

432 இன்னிங்ஸ் - அலெக்ஸ் ஹேல்ஸ்

 451 இன்னிங்ஸ் - சோயப் மாலிக்

 550 இன்னிங்ஸ் - கீரன் பொல்லார்ட்

 

ரிடி20 கிரிக்கெட்டில் 12,000-க்கும் அதிகமான ஓட்டங்கள் குவித்த வீரர்கள் : 14562 - கிறிஸ் கெய்ல்

13360 - ஷோயப் மாலிக்

12900 - கீரன் பொல்லார்ட்

12319 - அலெக்ஸ் ஹேல்ஸ்

12065 - டேவிட் வார்னர்

 12000* - விராட் கோலி

 ஐபிஎல் இல்  சிஎஸ்கே அணிக்கு எதிராக 1,000-க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் அடித்த வீரர்கள் :

 1057 - ஷிகர் தவான்

1030 - விராட் கோலி

அதிகமுறை டக் அவுட்டான அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 

  தீபச்சாகர் பந்து வீசியபோது அதிரடி வீரர் மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட்டாக்கி வெளியேறினார் ளை இழந்து தடுமாறியது.

  ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் தற்போது மேக்ஸ்வெல், ராயுடு, ரசித் கான், பியூஸ் சாவ்லா ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் தினேஷ் கார்த்திக் 17 முறை டக் அவுட்டாக்கி முதலிடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா 16 முறை டக் அவுட் ஆகி இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

தற்போது ஆர்சிபி வீரர் கிளன் மேக்ஸ்வெல் 15 முறை டக் அவுட் ஆகி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.சுனில் நரைன், மந்திப் சிங் ஆகியோரும் தலா 15 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார்கள்.   பீயூஸ் சாவ்லா, அம்பத்தி ராயுடு,மணிஷ் பாண்டே ஆகியோர் 14 முறையும் ஹர்பஜன் சிங், பார்த்திவ் பட்டேல், ரஹானே ஆகியோர் 13 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர்.

No comments: