நீளம் தாண்டும் வீரர்களின் டேக்-ஆஃப் போர்டு நழுவுவதற்கு காரணமான புகார்களைத் தொடர்ந்து, 'விரிவான ஆராய்ச்சி' நடந்து வருவதாகவும், அவர்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் பேசி வருவதாகவும் உலக தடகளப் பிரிவு தெரிவித்துள்ளது.
" உலக
தடகளப் போட்டிகள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை, காயங்களை ஏற்படுத்தக்கூடிய
சறுக்கல் டேக்-ஆஃப் போர்டு ஆகும்" என கடந்த வாரம், ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த்
விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கர்.
கடந்த ஆண்டு புடாபெஸ்டில் நடந்த உலக சம்பியன்ஷிப்
போட்டியின் போது ஜமைக்காவின் கேரி மெக்லியோட் , சகநாட்டவரான ஜெஸ்வின் ஆல்ட்ரின் ஆகியோர்
டேக்-ஆஃப் போர்டில் நழுவியதற்கு ஸ்ரீசங்கர்
உதாரணங்களை மேற்கோள் காட்டினார். ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்த
பிரான்சின் ஜூல்ஸ் பொம்மெரி, பலகையால் 'மூன்று-நான்கு முறை' நழுவி தனது
கணுக்காலில் காயம் அடைந்தார் என்று ஸ்ரீசங்கர் தெரிவித்தார் .
"பிரச்சினை புறப்படும் போர்டில் உள்ளது. புறப்படும்
பலகையின் பொருள் காரணமாக அனைவரும் நழுவினர். இது 2021 ஒலிம்பிக்கிற்கு (டோக்கியோ) பிறகு
அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அனைவரும் இதை விமர்சித்து வருகின்றனர். இது நிச்சயமாக
மரம் அல்ல. டேக்-ஆஃப் போர்டின் மெட்டீரியல் மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்,”
என்றும் ஸ்ரீசங்கர் கூறினார்.
முன்மொழியப்பட்ட
டேக் ஆஃப் மண்டலத்தின் நோக்கம், ஜம்பர்ஸ் அதிகமாகத் தாண்டுவதால் நேரத்தை வீணடிப்பதைக்
குறைப்பதாகும் என்று உலக தடகள தலைமை நிர்வாக
அதிகாரி ஜான் ரிட்ஜியன், கூறினார்.
"கடந்த கோடையில் புடாபெஸ்டில் நடந்த உலக சா\ம்பியன்ஷிப்
போட்டிகளில், அனைத்து தாவல்களிலும் மூன்றில் ஒரு பங்கு நோ-ஜம்ப்கள், விளையாட்டு வீரர்கள்
டேக்-ஆஃப் போர்டின் முன்புறத்தில் அடியெடுத்து வைத்தனர். எனவே நாங்கள் சோதனை செய்கிறோம், எடுத்துக்காட்டாக,
டேக்-ஆஃப் போர்டுக்கு பதிலாக டேக்-ஆஃப் மண்டலம் பற்றி பரிசீலிக்கொறோம். , எனவே தடகள
வீரர் எங்கிருந்து குழிக்குள் இறங்குகிறார் என்பதை நாங்கள் அளவிடுகிறோம். அதாவது, ஒவ்வொரு
தாவும் கணக்கிடப்படுகிறது…” என்றுரிட்ஜன் கூறினார்.
முன்னாள்
அமெரிக்க ஜாம்பவான் நான்கு முறை தொடர்ச்சியாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான
கார்ல் லூயிஸ், டேக்-ஆஃப் மண்டல திட்டத்தை விமர்சித்தார்.
உலக தடகளம் தற்போது பல இடங்களில் மற்றும் பல பயிற்சி குழுக்களில் டேக்-ஆஃப் மண்டலங்களுடன் சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சோதனை வெளிப்புற சீசன் முழுவதும் தொடரும். எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி கூறியது போல், நீளம் தாண்டுதல் குறித்த இந்த முன்மொழியப்பட்ட கண்டுபிடிப்பு சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படாது என உகல தடகளப் பிரிவு அறிவித்துள்ளது.
ரமணி
No comments:
Post a Comment