அமெரிக்காவின்
மெட்லைஃப் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற
மொராக்கோ அணிக்கு எதிரான குரூப் சி பிரிவு ஆட்டத்தில், நட்சத்திர வீரர் வினிசியஸ்
ஜூனியரின் அதிரடி கோலால் பிறேஸில் அணி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது.
ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் ஆப்பிரிக்க சம்பியனான
மொராக்கோ அணியின் இஸ்மாயில் சைபாரி ஒரு லாவகமான கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலை
பெறச் செய்தார். பிறேஸில் கோல்கீப்பர் அலிசன்
பெக்கரின் தலைக்கு
மொராக்கோ
முன்னிலை பெற்ற 11 நிமிடங்களிலேயே ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் புருனோ குய்மரைஸ் கொடுத்த
பாஸை பெற்றுக்கொண்ட வினிசியஸ் ஜூனியர், மொராக்கோ கோல்கீப்பர் யாசின் போனோவை ஏமாற்றி
பந்தை அற்புதமாக கோல் போஸ்ட்டிற்குள் அனுப்பினார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.
இது சர்வதேச போட்டிகளில் வினிசியஸின் 10வது கோலாகும்.
உலகத்
தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள பிறேஸில் மற்றும் 7வது இடத்தில் உள்ள மொராக்கோ அணிகள்
மோதிய இப்போட்டியை மைதானத்தில் 80,663 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். வலது காலில்
ஏற்பட்ட காயம் காரணமாக பிறேஸில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் இப்போட்டியில் விளையாடவில்லை.
மேலும், பிரேசில் அணியின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளரான இத்தாலியின் கார்லோ அன்செலோட்டிக்கு
இது உலகக் கோப்பையில் முதல் ஆட்டமாகும்.
இந்த
டிராவின் மூலம், உலகக் கோப்பை தொடக்க ஆட்டங்களில் கடந்த 21 போட்டிகளாக பிரேசில் அணி
தோல்வியே சந்திக்கவில்லை (17 வெற்றிகள்) என்ற பெருமையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 1934ல் ஸ்பெயினிடம் பிறேஸில் தோற்றிருந்தது. உலகக்
கிண்ண தொடக்க ஆட்டங்களில் மொராக்கோ
அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை
என்ற சோகம் நீடிக்கிறது.

No comments:
Post a Comment