லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணி 115 ஓட்ட்ங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்குச் சென்ற நியூஸிலாந்து மூன்று டெஸ்ட போட்டித்தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4ம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில்
இங்கிலாந்து 140 ஓட்டங்களும், நியூஸிலாந்து 113 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தன.
27 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது
இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 226 ஓட்டங்கள்
அடித்து ஆட்டமிழந்தது.
254 ஓட்டங்கள் எடுத்தால்
வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது. ஆனால் 3-ம் நாள்
ஆட்ட நேர இறுதியில் நியூஸிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்கள் என்ற நிலையில்
தடுமாறிக் கொண்டிருந்தது. 4-ம் நாள் ஆட்டத்தை
டேவன்கான்வே 19 ஓட்டங்களுடனும், டாம் பிளண்டல் 2 ஓட்டங்களுடனும் தொடங்கினர். ஆனால்
கான்வே 41 , பிளண்டர் 4 , நாதன் ஸ்மித் 4, கைல் ஜேமிசன் 6 ஓட்டங்கள் எடுத்து
ஆட்டமிழந்தனர்.
40.3 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 138
ஓட்டங்கள் எடுத்தது நியூஸிலாந்து. . கிளென் பிலிப்ஸ் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்
இருந்தார். கஸ்அட்கின்ஸன் 5, ஆலி ராபின்சன்,
ஜோஷ் டங் ஆகியோர் தலா 2, பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.
115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக ஆலி ராபின்சன் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 17ம் திகதி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

No comments:
Post a Comment