Tuesday, June 9, 2026

சோமாலிய நடுவரைத் தடுத்து நிறுத்தியது அமெரிக்கா

 அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும்  உலகக்  கிண்ணப் போட்டியில் நடுவராகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட சோமாலிய நடுவர் ஓமர் ஆர்டனுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

2025-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் சிறந்த நடுவராகப் பெயரிடப்பட்ட ஆர்டன், மியாமி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது அமெரிக்க சுங்க ,எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் (CBP) தடுத்து நிறுத்தப்பட்டார்.

திங்களன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், சிபிபி தனது வழக்கமான சுங்க நடைமுறையின் ஒரு பகுதியாக ஆர்டன் "கூடுதல் பரிசோதனைக்கு" உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

"ஆய்வைத் தொடர்ந்து, உலகக்  கிண்ணப் போட்டியின்  நடுவரான அந்தப் பயணி, சரிபார்ப்பு தொடர்பான கவலைகள் காரணமாக அனுமதிக்கப்பட முடியாதவர் எனத் தீர்மானிக்கப்பட்டு, அவருக்கு நுழைவு மறுக்கப்பட்டது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்தக் கவலைகளின் தன்மை குறித்து அந்த அமைப்பு விரிவாகக் கூறவில்லை.

 ஜூன் 9, 2025 முதல், முழுமையான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் நாடுகளின் அமெரிக்கப் பட்டியலில் சோமாலியா சேர்க்கப்பட்டுள்ளது, இருப்பினும் ஒவ்வொரு வழக்கையும் பொறுத்து விதிவிலக்குகள் வழங்கப்படலாம்.

அறிக்கைகளின்படி, ஆர்டனிடம் செல்லுபடியாகும் விஸாவும் தூதரக கடவுச்சீட்டும் இருந்தன. இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள் அவற்றை நாட்டிற்குள் நுழைவதற்குப் போதுமானதாகக் கருதவில்லை.

ஆர்டன் இதற்கு முன்னர் 2023 ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியில் நடுவராகப் பணியாற்றினார், மேலும் 2025-ஆம் ஆண்டில் கண்டத்தின் சிறந்த நடுவராக அங்கீகரிக்கப்பட்டார். முதலாவது உலகக்கிண்னப் போட்டியில் பங்குபற்றும் அவரது கனவு கலைக்கப்பட்டது.

முன்னதாக, ஈரான் தேசிய அணியின் வீரர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான விஸாக்களைப் பெற்றனர். ஆனால், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே அதிகரித்துள்ள பதட்டங்களைத் தொடர்ந்து,   அதிகாரிகள் , பணியாளர்கள் உட்பட 14 பேருக்கு விஸா   மறுக்கப்பட்டதாக அறிவித்த ஈரான் "பழிவாங்கும் நடத்தை" என்றும் அது விவரித்துள்ளது. குறைவாகக்

  

No comments: