Tuesday, June 9, 2026

சீல் செய்யப்பட்ட தண்ணீர்ப் போத்தல்களுக்கு அனுமதி

உலகக் கிண்ணப் போட்டிகளின் போது சில மைதானங்களுக்கு ரசிகர்கள் தங்கள் சொந்த தண்ணீர்ப் போத்தல்களைக் கொண்டு செல்ல   பீபா அறிவித்துள்ளது. இதன் மூலம், வட அமெரிக்கா முழுவதும் உள்ள  16 மைதானங்களுக்குள், குறிப்பாக சூரிய ஒளி குறைவாகவோ , இல்லாமலோ உள்ள சில மைதானங்களுக்குள், பார்வையாளர்கள் மீண்டும் நிரப்பக்கூடிய தண்ணீர் போத்தல்களைக் கொண்டு செல்லத்  தடை செய்திருந்த கொள்கையை இது மாற்றியமைக்கிறது.

  ரசிகர்கள் ஒரு மென்மையான, பிளாஸ்டிக், 20-அவுன்ஸ் (590 மில்லிலிட்டர்), தொழிற்சாலையில் சீல் செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தும் தண்ணீர்ப் போத்தலைக்  கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று பீபா  சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.

பீபா வெளியிட்ட ஒரு காணொளியில், தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஹெய்மோ ஷிர்கி, "பாதுகாப்பு மற்றும் பத்திர காரணங்களுக்காக" ரசிகர்கள் கடினமான பக்கங்களைக் கொண்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர்ப் போத்தல்களைக் கொண்டு வர இன்னும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார்.

  

No comments: