அமெரிக்காவின் லெவிஸ் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் சுவிட்சர்லாந்து மற்றும் கத்தார் அணிகள் மோதின.உலகக் கிண்ணப் போட்டியில் குரூப் பி பிரிவின் பலம் வாய்ந்த சுவிட்ஸர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 94 ஆவது நிமிடத்தில் நிமிடத்தில் கோல் அடித்த கட்டார் அணி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவை பதிவு செய்து, உலகக் கிண்ண வரலாற்றில் முதல் புள்ளியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
ஆட்டத்தின்
13வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் பிரீல் எம்போலோவை கட்டார் கோல்கீப்பர் முகமது
அபுநாடா ஃபவுல் செய்தார். இதனால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி எம்போலோ
17வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து சுவிட்ஸர்லாந்தை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.
விஸா பெறுவதில் ஏற்பட்ட தாமதத்திற்குப் பின் அமெரிக்கா வந்தடைந்த எம்போலோ அடித்த இந்த
கோலை சுவிஸ் ரசிகர்கள் கொண்டாடினர்.
ஆட்டம்
சுவிட்சர்லாந்தின் வெற்றி நோக்கி நகர்ந்த போது, ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (94வது
நிமிடத்தில்) மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கட்டார் வீரர் பௌலம் கௌகி கொடுத்த
அழுத்தத்தால், சுவிஸ் டிபெண்டர் மிரோ முஹெய்ம் பந்தை தவறுதலாக தனது சொந்த கோல் போஸ்ட்டிற்குள்
(ஓன் கோல்) தள்ளினார். இதன் மூலம் ஆட்டம் 1-1 என டிரா ஆனது.
கடந்த
2022ஆம் ஆண்டு தனது சொந்த நாட்டில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய கட்டார் அணி, லீக் சுற்றின்
அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. ஆனால், இம்முறை பலம் வாய்ந்த
சுவிஸ் அணியை டிரா செய்து, உலகக் கிண்ண வரலாற்றில்
தனது முதல் புள்ளியைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

No comments:
Post a Comment