1958 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய பீலே அணிந்திருந்த 10 ஆம் எண் சீருடை ஏலம் விடப்பட உள்ளது.
ஸ்டாக்ஹோமில் உள்ள ரசுண்டா மைதானத்தில் போட்டியை
நடத்திய சுவீடன் அணிக்கு எதிராக பிறேஸில் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றபோது,
பீலே இரண்டு கோல்களை அடித்திருந்தார்; அப்போது அவருக்கு 17 வயது. உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கோல் அடித்த மிக இளைய வீரர்
என்ற பெருமையை அவர் இன்றும் தக்கவைத்துக் கொள்கிறார். .
பீலே
தனது முதல் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில்
அணிந்திருந்த சீருடை ஜூன் 29 முதல் ஜூலை
16 வரை இணையவழி ஏலத்தில் விடப்படும்
2022
டிசம்பரில் பெருங்குடல் புற்றுநோயால் 82 வயதில் காலமான பீலே, இறுதிப் போட்டிக்குப்
பிறகு கையால் செய்யப்பட்ட அந்தச் சட்டையைத் தனது அறைத் தோழரும் சக வீரருமான டிடாவுக்குப்
பரிசாக அளித்தார். அது பல தசாப்தங்களாக டிடாவின் குடும்பத்தினரிடம் இருந்தது. பின்னர்
அது ஒரு பிறேஸிலிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு, இறுதியில் 2004-ல் அதன் தற்போதைய
உரிமையாளரால் கையகப்படுத்தப்பட்டது. அந்த உரிமையாளரின் பெயர் வெளியிடப்படவில்லை.
ரசிகர்கள்
, வீரர்கள் ஆகியோரின் கருத்துப்படியும், அந்த இறுதிப் போட்டியில் பிறேஸில்
ஜாம்பவானின் முதல் கோல், உலகக் கிண்ண வரலாற்றிலேயே
மிகச் சிறந்த கோல்களில் ஒன்றாகும். அவர் பந்தைத் தன் மார்பால் கட்டுப்படுத்தி, ஒரு
சுவீடன் தடுப்பாட்டக்காரருக்கு மேலாகத் தூக்கி எறிந்து கோல் அடித்தார். இரண்டாவது கோல்,
ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் தலையால் முட்டி அடிக்கப்பட்டது.
1970-ல்,
அமெரிக்கா , கனடாவுடன் இணைந்து போட்டியை நடத்தும் மூன்று நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோவில்,
பீலே தனது மூன்றாவது உலகக் கிண்ணல் பட்டத்தை
வென்றார். அன்று அவர் சம்பியனாகத் திகழ்ந்த அதே அஸ்டெகா மைதானத்தில்தான், இந்த ஆண்டு
உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டமும் நடைபெற உள்ளது; இதில் மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை
எதிர்கொள்கிறது.
சிலம்பு
7/6/26

No comments:
Post a Comment