Saturday, January 10, 2009

பொம்மலாட்டம்


பாரதிராஜாவின் அற்புதமான படங்களில் இதுவும் ஒன்று. சண்டை குத்துப்பாட்டு அரிவாள் வெட்டு எதுவும் இல்லாமல் சிறந்த படத்தைத் தந்துள்ளர் பாரதிராஜா.திரைப்பட இயக்குனரின் வாழ்க்கையில் நடைபெறும் சின்னச்சின்ன சம்பவங்களை துல்லியமக வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குனராக நடித்த நானாபடேகர் பாரதிராஜா நினைத்ததைப்போன்று இயல்பாக நடித்துள்ளார்.அர்ஜுன் நடித்திருப்பதால் ஒருசண்டைக்காட்சி இருக்கும் என எதிர்பார்த்து படம் பார்க்கப்போனவர்கள் ஏமாந்துபோனார்கள்.
பயங்கரம் குத்துவெட்டு ரத்த்ம் துப்பாக்கிச்சூடு எதுவும் இல்லாமல் மர்மக்கதை ஒன்றை தந்துள்ளார் பாரதிராஜா.இயக்குனர் நானாபடேகர் தனது அறிமுக நாயகியான ரஞ்சிதாவை கொலை செய்வதுடன் படம் ஆரம்பமகிறது.திட்டமிட்டு செய்தகொலையை மூடி மறைக்க முயற்சிக்கிறார் நானாபடேகர்.
அறிமுகநாயகியின் கொலையை விசாரிக்கும் அர்ஜுன், நானாபடேகர்மீது மேலும் இரண்டு கொலைகள்செய்ததாக நானாபடேகர்மீது குற்றம் சாட்டுகிறார்.படப்பிடிப்பின்போது நடந்த இரண்டு கொலைகளின் சூத்திரதாரி நானாபடேகர் என ஆதாரத்துடன் கூறுகிறார்.
திரைப்பட நாயகிகள் மீது சமுதாயத்தின் பார்வை. அதனால் நாயகிபடும் அவலம் . அதனைப் போக்குவதற்கு இயக்குநர் செய்யும் முயற்சி என்பனவற்றை பாரதிராஜா அருமையாகவிளக்கியுள்ளார்.நாயகியின்மீதுசில்மிசம் செய்பவர்களை கண்டிப்பது , நாயகிக்கு ஆறுதல்கூறுவது எல்லாம் இயல்பாகவே படமாக்கப்பட்டுள்ளது.
சினிமா உலகமே வியந்து போற்றும் இயக்குனரின் மனைவியும் பிள்ளையும் தனிமையில் தவிப்பதும் ,இயக்குனர்மீதுமனைவி சந்தேகப்படுவதும் சினிமாக்கலைஞர்களின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று.பொம்மலாட்டம் படத்தின்முடிவு தமிழ்த்திரைப்படத்துக்குப்புதிது.
நானாபடேகர்,அர்ஜுன்,ரஞ்சிதா,ருக்மணி ஆகியோர் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். கஜால்அகர்வால், விவேக் ஆகியோர் சும்மாவந்துபோனார்கள்.பாரதிராஜாவின் படங்களின் வெற்றிக்கு பெரியபங்களிப்புவழங்கியதில் இசையும் ஒன்று.இப்படத்தின் வெற்றிக்கு இசை எந்தவகையிலும் உதவவவில்லை.
உலகத்தரம் வாய்ந்த படத்தை பாரதிராஜா தந்திருக்கிறார் என்பதில் எதுவிதசந்தேகமும் இல்லை.குடும்பத்துடன் பார்த்துரசிக்கக்கூடியபடம்.

No comments: