Sunday, January 18, 2009

அவுஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி


தென்னாபிரிக்க அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையே ஹார்பட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 ஓட்டங்களினால் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்கள் எடுத்தது.
முதலாவது ஒருநாள் போட்டியில் 79 ஓட்டங்கள் எடுத்த வானர் ஐந்து ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
இரண்டாது இணைப்பாட்டமாக களமிறங்கிய மாஸ், பொன்டிங் ஜோடி சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. 72 பந்துகளுக்கு முகம் கொடுத்த பொன்டிங் 64 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
ஹசி 28, ஹுசே 19 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். மாஸ் 78 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
ஹெய்டன் ஆட்டம் இழக்காது 23 ஓட்டங்கள் எடுத்தார். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டம் இழந்தனர்.
நிதினி மூன்று விக்கெட்டுகளையும் ஸ்ரெயினி, கலிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
250 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி பரபரப்பான போட்டியில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்கள் எடுத்து ஐந்து ஓட்டங்களில் தோல்வியடைந்தது.
அம்லா எட்டு ஓட்டங்களிலும் கிப்ஸ் 19 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். கைல்ஸ், வில்லியம் ஜோடி நிதானமாகத் துடுப்பெடுத்தாடியது. 76 பந்துகளுக்கு முகம் கொடுத்த கைல்ஸ் 72 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். டிவில்லியஸ் 44 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். மக்கன் மோர்க்கிட் எட்டு ஓட்டங்களில் வெளியேற டும்மினி 35 ஓட்டங்களில் ரன்அவுட் முறையில் ஆட்டம் இழந்தார்.
50 ஓவர் முடிவில் தென்னாபிரிக்க அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்கள் எடுத்தது. பௌச்சர் ஆட்டம் இழக்காது 37 ஓட்டங்களையும் மோர்கிட் ஆட்டம் இழக்காது 11 ஓட்டங்களையும் எடுத்தனர்.
ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணி வீரர் மார்க்ஸ் தெரிவு செய்யப்பட்டார். அவுஸ்திரேலிய தென்னாபிரிக்க ஆகிய இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

No comments: