தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 103 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
மூன்று டெஸ்ட் தொடர் கொண்ட இப்போட்டியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று அவுஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 4?? ஓட்டங்களை எடுத்தது. நான்கு விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்கள் எடுத்தபோது அவுஸ்திரேலிய அணி இரண்
டாவது இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது.
தென் ஆபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 327 ஓட்டங்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆபிரிக்க அணி 272 ஓட்டங்கள் எடுத்தது. அம்லா 57 ஓட்டங்களும் டிவிலியஸ் 56 ஓட்டங்களும் எடுத்தனர். ஏனையோர் குறைந்த ஒட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய வீரர் கைட்டிலும் தொடர்நாயகனாக ஸ்மித்தும் தெரிவு செய்யப்பட்டார்கள். தனது மண்ணில் தொடரை இழந்த அவுஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஆறுதலடைந்தது.
100 ஓட்டங்கள்
கிளார்க் 138 அவுஸ்திரேலிய, ஸ்மித் 108 தென் ஆபிரிக்க, டிவிலியஸ் 106 (ஆ.இ)தென் ஆபிரிக்கா.
பொண்டிங் 101 அவு ஸ்திரேலியா, டுமினி 106 தென்னாபிரிக்கா. பொண்டிங் 99, ஜோன்சன் 61/8 அவுஸ்திரேலிய ஸ்ரெய்ன் 87/5 தென் ஆபிரிக்க ஸ்ரெய்ன் 67/5 தென் ஆபிரிக்கா.
No comments:
Post a Comment