Sunday, January 4, 2009
தடுமாறுகிறது பங்களாதேஷ்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மெண்டிஸின் சுழலில் சிக்கிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 208 ஓட்டங்கள் எடுத்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 384 ஓட்டங்கள் எடுத்தது.
டில்சான் 162 ஓட்டங்களும் கபுகெதர 96 ஓட்டங்கள், வர்ணபுர 63 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் மிகமிகக் குறைவான ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சமரவீர 19, மஹேல 11 ஓட்டங்கள் எடுத்தனர்.
ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறி னர். முதல் டெஸ்ட்டில் கலக்கிய சஹீட் அல் ஹசனின் இல ங்கை வீரர்கள் திக்கு முக்காடினர். அனுபவம் உள்ள உலக அணிகளை அச்சுறுத்தும் இலங்கை வீரர்கள் பங்களா தேஷ் வீரர்களின் பந்துக்கு தாக்குப்பிடிக்க முடியாது சுருண்டனர்.
கபுகெதர 93 ஓட்டங்களுடனும், வாஸ் ஒரு ஓட்டத்துடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர். டில்சா னின் சதத்தைத் தொடர்ந்து கபுகெதரவும் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 96 ஓட்டங்களை எடுத்த சமரவீர சஹிர் அல் ஹசனின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். இலங்கை அணியின் கடைசி நான்கு வீரர்களும் 13 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தன.
சஹீட் அல்ஹசன் நான்கு விக்கெட்டுகளையும், மொத்தரசா மூன்று விக்கெட்டுகளையும் ஹுசேன், எனமுல் ஹபீல், மொஹமட் அஸ்ரபுல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பங்களாதேஷ் அணி முதலாவது இன்னிங்ஸில் 208 ஓட்டங்களை எடுத்தது.
பந்து வீச்சாளரான மொட்டரசா சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 63 ஓட்டங்கள் எடுத்தார். ஒன்பதாவது இணைப்பாட்டத்தில் மொட்டரசாவும் ஹீசேனும் இணைந்து 63 ஓட்டங்கள் எடுத்தனர். ஹீசேன் ஐந்து ஓட்டங்களை மட்டும் எடுத்தார். மொட்டரசா இரண்டு சிக்சர்கள், 8 பவுண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்கள் எடுத்தார்.
மொஹமட் அஸ்ரபுல் 45, சித்திக் 28, ரஹீம் 21 ஓட்டங்கள் எடுத்தனர்.
மெண்டிஸ் நான்கு விக்கெட்டுகளையும், முரளிதரன் மூன்று விக்கெட்டு களையும், வாஸ் இரண்டு விக்கெட்டுகளையும் பெர்னாண்டோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment