Friday, July 13, 2012

லண்டன் ஒலிம்பிக் உதைப்பந்தாட்டம் 2

Mata_Reuters

ஸ்பெய்ன்
லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளின் ஓர் அங்கமாக விளங்கும் உதைபந்தாட்டப் போட்டிகளுக்கென யூரோ 2012 வெற்றிக் கிண்ணப் போட்டிகளில் அபாரமாக ஆடிய மூன்று ஆங்கில பிரிமியர் லீக் வீரர்களை ஸ்பெய்ன் தனது 22 பேரடங்கிய உதைபந்தாட்ட அணிக்கென தெரிவு செய்துள்ளது.

இத்தாலிக்கு எதிரான யூரோ 2012 இறுதிப் போட்டி வெற்றியின் போது நான்காவது கோலைப்போட்டிருந்த செல்ஸி அணி வீரர் ஜுவான் மாட்டா ஸ்பெய்ன் அணியின் வயது கூடிய மூன்று வீரர்களுள் ஒருவராக பெயர் குறிக்கப்பட்டுள்ளார். அவரது கழக ரக வீரரான ஓரியல் ரொமியூ (20) மற்றும் மன்செஸ்டர் யுனைடெட் கோல் காப்பாளர் டேவிட் டீ கீ (21) ஆகியோரும் 18 வீரர்களாகக் குறைக்கப்பட வேண்டிய ஒலிம்பிக் அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

யூரோ 2012 சம்பியனான ஸ்பெய்ன் அணியின் இடது பின்கள வீரராக அபாரமாக விளையாடிய பார்ஸிலோனா அணியின் புதியவரான ஜோர்டி அல்பா ஒலிம்பிக் வீரர்கள் பட்டியலில் அணியின் தனிச்சிறப்புப் பெற்றவராக காணப்படுகின்றார்.  வீரர் மட்டாவும் அவரது கழக சக வீரர்கள் தியாகோ அத்லெடிக் பில்பாவோ வீரர் அன்டர் ஹெராரோ ஆகியோருடன் இணைந்து நடுகள ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸ்பெய்ன் அணியின் பயிற்சியாளரான லூயிஸ் மில்லா இது பற்றி தெரிவிக் கையில்,  தேசிய அணியென்ற வகையில் இந்த அணி அதே அடைவு மட்டத்தைக் கொண்டிருக்க வேண்டுமெனக் கோருவது நியாயமற்றதென நான் நம்புகிறேன். அணிக்கென குணநலன் இருப்பதுடன் அதையொத்த விளையாட்டு தத்துவமும் இருக்கவே இருக்கின்றது. ஆயினும் வேறுபாடான அழுத்தங்களைக்குள்ளான. வேறுபட்டதொரு அணியே இதுவாகும் எனக் குறிப்பிட்டார்.

சுவிற்ஸர்லாந்தும் பிரிமியர் லீக் போட்டிகளில் அபாரமாக விளையாடிய சில வீரர்களைத் தெரிவு செய்துள்ளது.
அவர்களுள் புல்காம் அணி வீரர் பச்டிம் கசாமி மற்றும் வில்லா கோல் காப்பாளர் பெஞ்சமின் கிரிஸ்ட் ஆகியோரும் அடங்குகின்றனர்.

மெட்ரோநியூஸ்09/07/12

No comments: