Wednesday, July 11, 2012

அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணி அறிவிக்கப்பட்டது


கடந்த 2008 ஆம் ஆண்டில் சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளின் போது தங்கப் பதக்கங்களைத்  தட்டிச் சென்ற ஐந்து வீரர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ள லண்டன் 2012  ஒலிம்பிக் ஆண்களுக்கான  பன்னிரெண்டு பேரடங்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
@வபு@ரான் ஜேம்ஸ், கோபே பிரியன்ட் கார்மெலோ அந்தனி,  கிறிஸ்போல் மற்றும் டெரோன் வில்லியம்ஸ் ஆகிய ஐந்து வீரர்களுமே  அவர்களாவர்.
அமெரிக்க ஒலிம்பிக் குழுவின் இறுதி அங்கீகாரம்  இன்னமும் பெறப்பட வேண்டிய போதிலும் லாஸ் வெகாஸில் நடத்தப்பட்ட அமெரிக்க அணிக்கான இரண்டு பயிற்சித் தொடர்களையடுத்தே அமெரிக்க கூடைப்பந்தாட்டச் சங்கத் தலைவர் ஜெரி கௌவான் ஜெவோ மேற்கண்டவாறு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
""பன்னிரெண்டு வீரர்களும்
விளையாட வேண்டிய கிரமத்தைக் குறிக்கும் முறைப் பட்டியலைத் தயாரிக்கும் போது காயப்பட்டோரின்  எண்ணிக்கையைக் கணக்கிலெடுக்காமல் அவர்கள் விளையாட்டில் காட்டிய அபõரத் தன்மையை கருத்திலெடுத்தே இந்தத் தெரிவை நாம் மேற்கொண்டோம்'' எனக் கூறியுள்ள அவர் இதன் இறுதி தேர்வுகள் நிச்சயமாக மெய்வன்மையை வெளிப்படுத்தவல்ல போட்டியொன்றை விரும்பும் எங்களுக்குத் திருப்தியளிக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அணி வீரர்களுக்கான அண்மைய பயிற்சித் தொடர்களின்  போது சிக்காக்கோ புல்ஸ் அணியைச் சேர்ந்த டெரிக் ரோஸ்,  ஓர்லாண்டோ மாஜிக் அணியைச் சேர்ந்த ட்வைட் ஹோவாட் மற்றும் மியாமி ஹுட் அணி வீரர்களான ட்வையானி  வேட் மற்றும் கிறிஸ்போஷ் ஆகியோர்  உள்ளிட்ட பல்வேறு முன்னணி வீரர்கள் காயமடைந்திருந்தமை அமெரிக்க ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட அணிக்கோர் பலத்த அடியாகவே இருந்தது  குறிப்பிடத்தக்கது.

தேசிய கூடைப்பந்தாட்ட  அணிக்கான வீரர்கள் தேர்வில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களும் உயிரைக் கொடுத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் இறுதித் தீர்வை  தீர்மானிப்பதில் நாம் பெரும் சங்கடப்பட வேண்டியிருந்ததென அமெரிக்க பயிற்றுவிப்பா ளர் மைக் கிறிஸ்ஸேப்ஸ்கி தெரிவித்தார்.

மெட்ரோநியூஸ்09/07/12

No comments: