Tuesday, July 17, 2012

ச‌ஞ்சிகையில் அழகு காட்டும் நீச்ச‌ல் வீராங்கனை



லண்டனில்  தொடங்கவுள்ள  ஒலிம்பிக் போட்டியில் மாற்றுத் திறன்   கொண்டோருக்கான படகோட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள வீராங்கனை ஒக்சனா மாஸ்டேர்ஸ் உகுகN தொலைக்காட்சி நிறுவனத்தின்  2012  ESPN  எனும் சஞ்சிகைக்கு முழு நிர்வாணக் கோலத்தில் அழகு காட்டியுள்ளார்.
பிரபலமான விளையாட்டு வீர வீராங்கனைகள் தங்கள் உடல் வசீகரங்களைப் பற்றி பேசும் சந்தர்ப்பத்தை வருடாந்தம் வழங்கி வரும் Body  சஞ்சிகையில் உக்ரைன் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த 23 வயதான வீராங்கனை தனது சிறுவயதில் தனது கால்கள் இரண்டையும் துண்டிக்கப்பட்ட நிலையில் வளர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. பளபளப்பான இந்தச் சஞ்சிகையின் பக்கங்களில் அவர் இறங்கு துறை ஒன்றில் தனது பட கோட்டும் துடுப்புகள் அருகே நிர்வாணமாக தோன்றுகின்றார். அத்துடன் உலகத்தரம் வாய்ந்த மெய்வல்லுநர்களான நியூயோர்க் கூடைப்பந்தாட்ட வீரர் டைசன் சாண்ட்லர் மற்றும் ஸ்லோவேக்கியா டெனிஸ் நட்சத்திரம் டானியெலா ஹன்டுசோவா ஆகியோரின் புகைப்படங்களும் இந்தச் சஞ்சிகையில் அலங்கரிக்கின்றன.

அநாதை இல்லமொன்றில் வளர்ந்த ஒக்சனாவுக்கு அங்கு உணவென்பது அருமையாகவே கிடைக்குமொன்றாக இருந்த படியால் தனது சிறுபராயத்தில் அவர் பெரும்பாலான நாட்களை உணவின்றியே கழித்தார். உணவின்றி தனது வாழ்நாளைக் கழிக்க முடியுமென கூறும் அவர் உக்ரைனில் உள்ள மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த அந்த அநாதை இல்லத்தில் உணவின்றி வளர்ந்த தனது துன்ப அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் அவர் உணவைப் பற்றி நான் கிஞ்சித்தும் நினைப்பதேயில்லை என்கிறார். இதனாலேயே தனக்கு கடினமான விடயங்களில் உணவை உட்கொள்வதும் ஒன்றென அவர் தெரிவித்துள்ளார். தனது ஏழாவது வயதில் தத்தெடுக்கப்பட்ட அவர் அதன் பின்னர் கெண்டுசியில் உள்ள லூயில்வில்லேக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தனது கிராமத்திற்கு அருகேயுள்ள அணுவாயுத உலையொன்றின் கதிர் வீச்சால் தனது இரண்டு கால்களையும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டிருந்ததாகவும் ஓஃ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்க்காணலின் போது கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நான் கால்களுடன் பிறந்த போதிலும்  அவை அவலட்சணமான நிலையிலேயே இருந்தன. எமது கிராமத்தில் அடிக்கடி நிகழ்ந்த அணு உலைக் கதிர் வீச்சுக் கசிவினால் எனது கால்கள் இரண்டும் சுட்டுப் பொசுக்கப்பட்ட நிலையில் அவை துண்டிக்கப்பட்டன. தான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது படகு வலிக்கும் பயிற்சியில் ஈடுபட அவரது தாயாரால் ஊக்குவிக்கப்பட்ட ஒக்சானா காலப்போக்கில் அதில் தீவிர பற்றுக் கொண்டவராக விளங்கி இன்று ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுமளவுக்கு தன்னை ஆளாக்கிக் கொண்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 29 தொடக்கம் செப்டெம்பர் 9 வரையிலான மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிகள் முழு நேர
வேலை போன்றது. வாரத்தின் எழு நாட்களில் செல்வி மாஸ்டர் ஆறு நாட்களைக் தண்ணீரிலேயே கழித்து வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த 2010 ஆம் ஆண்டில் அவரது சகாவான ரொப் ஜோன்ஸ் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த விபத்தொன்றில் தனது கால்களை இழந்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிக்கான சேர்பியாவில் நடைபெற்ற கலப்பு இரட்டையர்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் பிரேசிலை இவர்களிருவரும் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2012 கோடை கால படகோட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ள இங்கிலாந்தின் ஒஹியோ தொடக்கம் டோர்ணி வரையான ஏரியில் தனது படகை எடுத்துக் கொள்ள காத்திருக்கவென தன்னால் முடியவில்லை எனவும் தான் ஆறு வருட காலமாகப் பெற்ற பயிற்சிகளில் மிகப் பெரிய பயிற்சி இந்தக் கோடை காலப் போட்டிகளே  எனவும் குறிப்பிட்ட ஒக்சானா நான் பரபரப்படைந்துள்ள நிலையில் பாலாடைக்கட்டி போன்ற பெரியதொரு குழந்தை போன்று புன்னகை செய்கிறேன் எனவும் கூறினார்.

மெட்ரோநியூஸ்16/07/12

No comments: