Friday, July 6, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 8

சுவீடன் 

லண்டனில் ஒலிம்பிக்கில் மகளிர் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு ஐரோப்பா கண்டத்தில் இருந்து பிரான்ஸ், சுவீடன் ஆகியன தேர்வு பெற்றுள்ளன. ஒலிம்பிக்கை நடத்தும் நாடான இங்கிலாந்து மகளிர் நேரடியாகத் தெரிவாகியுள்ளது.
பிரான்ஸ் மகளிர் உதைபந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலில் விளையாட தகுதி பெற்றுள்ளது. இது 2004 இல் நடைபெற்ற தகுதிகாண் போட்டியல் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய பிரான்ஸ், ஒலிம்பிக் விளையாடும் தகுதியை இழந்தது.
பிரான்ஸ் அணியில் பயிற்சியாளராக 2007 ஆம் ஆண்டு பினி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மார்ச் வரை நடைபெற்ற 12 போட்டிகளில் பிரான்ஸ் தோல்வியடையவில்லை. கனடாவுடனான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, வடகொரியா ஆகியவற்றுடன் குழு ஜீ யில் உள்ளது பிரான்ஸ்.

மகளிர் உதைபந்தாட்ட அணிகளில் பலவாய்ந்தவற்றில் சுவீடனும் ஒன்று என்று ஒலிம்பிக் போட்டியில் தொடர்ச்சியாகப் பங்குபற்றிய அணி. 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில்ஜேர்மனியிடம் தோல்வி கண்டு நான்காவது இடத்தைப் பெற்றது.
2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிவரை முன்னேறியது. பிரான்ஸுடனான ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் எதிரணிகளுக்கு சவால் விடும் வகையில் உள் ளது.  ஜப்பான், கனடா, தென் ஆபிரிக்கா ஆகியவற்றுடன் குழு எஃப் இல் உள்ளது சுவீடன்.

இங்கிலாந்து மகளிர் உதைபந்தாட்ட அணி முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற் றுகிறது. 2007, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மகளிர் உதைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் காலிறுதிவரை முன்னேறி தோல்வியடைந்தது.
யூ.ஈ.எஃப். ஏ 2009 மகளிர் சம்பியன் கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாமிடம் பெற்றது.நியூஸிலாந்து, கமரூன், பிரேஸில் ஆகியவற்றுடன் குழு ஈ யில் உள் ளது இங்கிலாந்து.
ரமணி
மெட்ரோநியூஸ்06/07/12

No comments: