Saturday, July 14, 2012

போலியான ஒலிம்பிக் தீபத்துடன் ஓடிய நிர்வாண இளைஞன் கைது


போலியான ஒலிம்பிக் தீபத்துடன் ஓடிய நிர்வாண இளைஞன் ஒருவன் கைது செய்ய‌ப்பட்டான். லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னமும் 14 நாட்களே உள்ள நிலையில் பிரித்தானியாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் 70 நாள் அஞ்சலோட்ட நிகழ்வின் 53 ஆவது நாளைய ஒலிம்பிக் தீபம் ஏந்தல் நிகழ்வு இடம் பெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இளைஞரொருவர் நிர்வாணக் கோலத்தில் போலியான ஒலிம்பிக் தீபமொன்றைத் தனது கையிலேந்திய வண்ணம் ஓடியதால் பார்வையாளர்களிடையே பெரும் பரபரப்பு காணப்பட்டது.
ஆமாம் 53 ஆவது நாளின் ஒலிம்பிக் தீபத்தை சேர் ரொஜர் பனிஸ்டர் ஏந்திச் செல்வதற்கென ஆயத்தமானார். இதன்@பாது ஒக்ஸ்போர்டில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் தனது மார்க்கத்தை பூர்த்தி செய்திருந்த லண்டன்  2012 ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான செபஸ்டியன் கோ பிரபு மெய் வல்லுநர்கள் அணியுடன் இணைந்தார். இதன் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து தடவைகள் தங்கப் பதக்கத்தை வென்றிருந்த சேர் ஸ்டீவ் ரெட்கி@ராவும் ஒலிம்பிக் தீபத்தை தேம்ஸ் நதிக் கரையோர நகரான ஹென்லியில் ஏந்திச்சென்றார். அந்த நேரத்தில் எவருமே எதிர்பாராத விதத்தில் அந்த நிர்வாணக் கோல இளைஞன் பார்வையாளர்களைக் கடந்து ஓடி ஒலிம்பிக் தீப அஞ்சலோட்ட நிகழ்வைக் குழப்பியடித்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டான். மாறுபட்ட வர்ணக் கோடுகளை கொண்டிருந்த அவனது நிர்வாண மேனியின் பின்பக்கத்தில் (முதுகுப் புறம்) சுதந்திர திபெத் எனும் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. நிர்வாணக் கோலத்தில் காட்சியளித்து பொது மக்கள் கண்ணியத்திற்கு களங்கம் கற்பித்த 27 வயதான ஹென்லியைச் சேர்ந்த அந்த இளைஞனைப் பொலிஸார் கைது செய்ததுடன் அவனைப் போர்வையொன்றால் போர்த்தியபடி அழைத்துச் சென்றனர்.


ஒக்ஸ்போட் ஷயர் நகரத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த அந்த ஒலிம்பிக் தீப அஞ்சலோட்ட நிகழ்வைக் கண்டுகளித்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அந்தப் பரட்டைத் தலை நிர்வாண மனிதன் அங்கு குழப்பம் விளைவித்ததை நேரில் அவதானித்துக் கொண்டிருந்தனர். ஹென்லி நகர் வாசியொருவர் இதுபற்றி கூறுகையில்,
சனக் கூட்டத்திலிருந்து வெளியே வந்த நிர்வாண இளைஞன் போலியான தீபத்தை ஏந்தியபடி ஓடிக்கொண்டிருந்தான் என்றார்.
சுற்றுச் சூழல் விஞ்ஞானியான அன்ட்ரூ ரின்ஸ் லீ தெரிவிக்கையில், அந்த இளைஞன் எங்கிருந்தும் வரவில்லை. தருணத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்த அவன் தான் நினைத்ததைச் சாதித்து விட்டானென்றே கூற வேண்டும் என்றார்.

மெட்ரோநியூஸ்13/07/12

No comments: