Tuesday, October 10, 2017

உலகக் கிண்ணப் போட்டியில் 28வருடங்களின் பின் எகிப்து


ரஷ்யாவில் 2018-ம் ஆண்டு  நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்   தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஆப்பிரிக்க நாடுகள் இடையிலான தகுதி சுற்று போட்டியில்  வெற்றி பெற்ற எகிப்து அணி 28 வருடங்களுக்குப் பிறகு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது

 எகிப்து - காங்கோ அணிகள் நேற்று கெய்ரோவில் மோதின. இதில் எகிப்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் நட்சத்திர வீரரான முகமது சலாஹ் 63-வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு 1-0 என முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.   
  
போட்டி  முடிவடைய 2 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் காங்கோ அணி பதிலடி கொடுத்து 1-1 என சமநிலையை ஏற்படுத்தியது. 88-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் அர்னால்டு போகா அசத்தலாக கோல் அடிக்க எகிப்து வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கடைசி நிடத்தில் எகிப்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி முகமது சலாஹ் கோல் அடிக்க எகிப்து அணி அபார வெற்றி பெற்றது.

பிரிவில் இடம் பிடித்துள்ள எகிப்பது அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளதுடன் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது எகிப்து கடைசியாக 1990-ம் ஆண்டு உலகக்  கிண்ணப் போட்டியில் விளையாடியது.

ஆப்பிரிக்க நாடுகள் பிரிவில் உலகக் கோப்பை தொடருக்கு ஏற்கெனவே நைஜீரியாவும் தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



No comments: