தோல்வியின் விரக்தியில் மெஸ்ஸி |
உதைபந்தாட்ட
உலகில் முன்னிலை வகிக்கும் லியோனல்
மெஸ்ஸிக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான இரசிகர்கள் இருக்கின்றனர். ஆர்ஜென்ரீனா,
பார்சிலோனா உதைபந்தாட்ட அணிகளின் பலமே
மெஸ்ஸிதான். பர்சிலோனாவுக்கு பல
வெற்றிக் கின்னங்களைப் பெற்றுக்கொடுத்த லியோனல் மெஸ்ஸியால் தாய்நாடான
ஆர்ஜென்ரீனாவுக்கு உலகக்கிண்ணத்தைப்
பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கிண்ண. மெஸ்ஸி தலைமையிலான
ஆர்ஜென்ரீனா பங்குபற்றுவது சந்தேகமாக உள்ளது. ஆர்ஜென்ரீனா, நாட்டின் வீரர்கள்
பலர் மெஸ்ஸியைப் போன்று ஐரோப்பியக் கழகங்களுக்காக விளையாடி
வருகின்றனர்.
பெருவுக்கு எதிரான
தகுதிகாண் போட்டி கோல் எதுவும் அடிக்கப்படாமல்
வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றதால் ஆர்ஜென்ரீனாவுக்கு சிக்கல்
ஏற்பட்டுள்ளது. தென். அமெரிக்காவில் தகுதிகாண் போட்டியில் பத்து நாடுகள் போட்டி
போடுகின்றன.முதல் அணியாக பிரேஸில் தகுதி பெற்றுள்ளது. உருகுவே,சிலி,கொலம்பியா
ஆகியவை முறையே இரண்டாம்,மூன்றாம்,நான்காம் இடங்களில் இருகின்றன.முதல் நான்கு
இடங்களில் உள்ள நாடுகள் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட நேரடியாகத் தகுதி
பெற்றுவிடும். ஐந்தாவது இடத்தில் இருக்கும் நாடு நியூஸிலாந்துடன் இரண்டு பிளே ஃஒவ் போட்டிகளில் வெற்றி பெற்றால் உலகக்கிண்ணத்தில்
விளையாடத் தகுதி பெற்றுவிடும்.
சந்தோஷ உற்சாகத்தில் பெரு ரசிகர்கள் |
தென் அமெரிக்காவில்
பிரேஸில் 38 , உருகுவே 28, சிலி 26 , கொலம்பியா26, பெரு 25, ஆர்ஜென்ரீனா
25 ஆகியன புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களில்
இருக்கின்றன.பரகுவே,ஈக்குவடோர்,வெனிசுவேலா,பொலிவியா ஆகியன புள்ளிப்பட்டியலில் பின்
தங்கியதால் தகுதி இழந்துள்ளன. பிரேஸிலைத் தவிர ஏனைய நாடுகளுக்கு இன்று நடைபெறும்
போட்டி பிரதானமாகும். இன்றைய போட்டி விபரம் பராகுவே எதிர் வெனிசுவெலா,உருகுவே
எதிர் பொலிவியா,பெரு எதிர் கொலம்பியா, பிரேஸில் எதிர் சிலி, ஈக்குவடூர் எதிர்
ஆர்ஜென்ரீனா
பெரு-கொலம்பியா,
ஈக்குவடோர்- ஆர்ஜென்ரீனா இந்த இரண்டு போட்டிகளும் இன்று உலகெங்கும் உள்ள ரசிகர்களால் எதிர்
பார்க்கப்படும் போட்டியாகும்.இந்த இரண்டு போட்டிகளும் சமநிலையில் முடிந்தால்
ஐந்தாவதுதி இடத்தில் இருக்கும் பெருவுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். இதேவேளை 24 புள்ளிகளுடன் இருக்கும் பராகுவே வெற்றிபெற்றால்
அது ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி நியுஸிலாந்துக்கு எதிராக விளையாடும் வாய்ப்பைப்
பெற்று விடும்.
சந்தோஷ உற்சாகத்தில் பெரு ரசிகர்கள் |
பெரு, ஆர்ஜென்ரீனா
ஆகிய இரண்டு நாடுகளும் வெற்றி பெற்றாலும் கோல்களின் அடிப்படையில்பேறு முன்னணியில்
இருக்கிறது. பெரு 26 பெருகோல்கள் அடித்துள்ளது.
ஆர்ஜென்ரீனா 16 கோல்கள்
அடித்துள்ளது. பெருவுக்கு எதிராக 25 கோள்களும்,
ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக 15 கோள்களும்
அடிக்கப்பட்டன. கொலம்பியாவுக்கு எதிரான முதலாவது தகுதிகாண் போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் பெரு தோல்வியடைந்தது.
ஈக்குவடோருக்கு எதிரான முதலாவது தகுதிகாண்
போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில்
ஆர்ஜென்ரீனா தோல்வியடைந்தது
ஈக்குவடோரின் தலைநகர்
குயிடோ 29,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு கடைசியாக நடைபெற்ற
இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆர்ஜென்ரீனா ஒரு போட்டியை சம நிலையில் முடித்தது.
தகுதிகாண் போட்டியின் கடைசி மூன்று போட்டிகளையும் ஆர்ஜென்ரீனாசமநிலையில்
முடித்தது. ஈக்குவடோர் விளையாடிய ஐந்து போட்டிகளும் தோல்வியில் முடிந்தது.
உயிரைக் கொடுத்தாவது
வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் பெருவும்
ஆர்ஜென்ரீனாவும் இருக்கின்றன.
No comments:
Post a Comment