Thursday, October 12, 2017

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை


இந்தியாவுடனான சகல போட்டிகளிலும் தாய்நாட்டில் தோல்வியடைந்த இலங்கை, துபையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி ஆறுதலடைந்துள்ளது.

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல் - இரவு ஆட்டமாக துபாயில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில்   வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இலங்கை 482 ஓட்டங்கள்  குவித்து ஆட்டம் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 262 ஓட்டங்களில் சகல விக்கெற்களையும் இழந்தது.

  220 முன்னிலையுடன்  முன்னிலையுடன் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 96 ஓட்டங்களில் சுருண்டது.

இலங்கை 96 ஓட்டங்கள் எடுத்ததாலும் பாகிஸ்தானை விட 316ஓட்டங்கள்  முன்னிலை பெற்றது. இதனால் 317 ஓட்டங்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. இலங்கையின் துல்லியமான பந்து வீச்சால் 52 ஓட்டங்கள்  எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து பாகிஸ்தான் தத்தளித்தது.
 196 அடித்த கருணாரத்ன‌
6-வது விக்கெட்டுக்கு ஆசாத் ஷபிக் உடன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டதுடன்,  பாகிஸ்தானின் அணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கையையும் வளர்த்தது.

இருவரது ஆட்டத்தாலும் பாகிஸ்தான் அணி   4-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198ஓட்டங்கள்  எடுத்திருந்தது. ஆசாத் ஷபிக் 86 ஓட்டங்களுடனும்  சர்பிராஸ் அஹமது 57 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி வெற்றிக்கு 119 ஓட்டங்கள்  மட்டுமே தேவைப்பட்டது.

  ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. அசாத் ஷபிக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். ஆனால் சர்பிராஸ் அஹமது 68 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெரேரா பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் பாகிஸ்தான் அணி தோல்வியை நோக்கி சென்றது.
மொகமது அமிர் 4 ஓட்டங்களுடனும்  யாசிர் ஷா 5  ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து வெளியேற, சதம் அடித்த ஷபிக் 112 ஓட்டங்களில் வெளியேறினார். வஹாப் ரியாஸ் ஒரு ஓட்டத்துடன்  வெளியேற, பாகிஸ்தான் 90.2 ஓவரில் சகல விக்கெற்களையும் இழந்து 248 ஓட்டங்கள்  எடுத்தது.  இதனால் இலங்கை அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

முதல்  இன்னிங்சில் 196 ஓட்டங்கள் எடுத்த கருணாரத்னே ஆட்ட நாயகன் விருதையும், இரண்டு டெஸ்டிலும் சேர்த்து 300 ரன்களுக்கு மேல் குவித்ததால் தொடர் நாயகன் விருதையும் பெற்றார்

No comments: