உலகக்கிண்ண உதைபந்தாட்ட தகுதிச் சுற்றில் 10 போட்டிகள்;இலும் வெற்றி பெற்று ஜேர்மனி அணி சாதனை படைத்துள்ளது.
ரஷ்யாவில் 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடருக்கு நடப்பு சாம்பியனான ஜேர்மனி அணி
ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் அந்த அணி தகுதி சுற்றின் கடைசி
ஆட்டத்தில் நேற்று முன்தினம் பெர்லின் நகரில் அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது.
இதில் ஜேர்மனி 5-1 என்ற கோல்
கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணித் தரப்பில் நடுகள வீரரான லியோன் கோரேட்ஸ்கா இரு
கோல்களும், சான்ட்ரோ வெங்கர், அன்டோனியா ருடிஜர், எம்ரே கேன் ஆகியோர் தலா ஒரு
கோலும் அடித்தனர்.
தகுதி சுற்றில்
அனைத்து ஆட்டங்களிலும் ஜெர்மனி அணி வெற்றி பெற்று உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடருக்குள் நுழைவது இதுவே முதன்
முறை. ஐரோப்பிய நாடுகளில் தோல்வியை சந்திக்காமல் உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டிக்குத் பெறும் இரண்டாவது அணி ஜேர்மனி ஆகும்.
இதற்கு முன்னர்
ஸ்பெயின் இதேபோன்று 2010-ம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடருக்கு முன்னேறியதுடன் பட்டம்
வென்று சாதனை படைத்திருந்தது. தகுதி சுற்று ஆட்டங்களில் ஜேர்மனி அணி இம்முறை 43 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளது.
No comments:
Post a Comment