Thursday, October 19, 2017

ஹசன் அலி 5 விக்கெற்ட் இமாம் உல் ஹக் அறிமுக சதம்

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்த நிலையில், நேற்று முன்தினம்  3-வது ஆட்டம் அபுதாபியில் நடைபெற்ற போட்டோயில் வெற்றி பெற்ற  பாகிஸ்தான் தொடரைக் கைப்பற்றியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை  முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 48.2 ஓவர்களில் 208 ஓட்டங்களில் சகல விக்கெற்களையும் இழந்தது. கப்டன் தரங்கா அதிகபட்சமாக 61 ஓட்டங்கள் எடுத்தார். ஹசன் அலி 10 ஓவரில் 34 ஓட்டங்கள்  மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 42.3 ஓவர்களில் 3 விக்கெற்களை  இழந்து  209ஓட்டங்கள்  எடுத்து 7 விக்கெற்ட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் இமான்-உல்-ஹக் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அவர் 125 பந்தில் 100 ஓட்டங்கள்  (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இவர் முன்னாள் பாகிஸ்தான் வீரரான இன்சமாம் உல் ஹக்கின் உறவினர் ஆவார்.



ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால் பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றியை பெற்று தொடரையும் கைப்பற்றியது. 4-வது ஆட்டம் சார்ஜாவில் இன்று நடக்கிறது. ஆட்டநாயகன் விருதை முதலாவது சதம் அடித்த  இமாம் உல் ஹக்  பெற்றுக்கொண்டார்.

No comments: