ஈக்குவாடோருக்கு எதிரான
கடைசிப் போட்டியில் வெற்றி பெற்ற ஆர்ஜென்ரீனா 2018 உலகக்கிண்ண
உதைபந்தாட்டத்தில் விளையாடத் தகுதிபெற்றுள்ளது. ரஷ்யாவில், அடுத்த ஆண்டு உலகக்கிண்ண
உதைபந்தாட்டப் போட்டி நடைபெற உள்ளது. இந்த
ஆண்டு தகுதிச்சுற்று போட்டிகளில் மிகவும் சுமாராக விளையாடி வந்த ஆர்ஜென்ரீனா அணி, ஆறாவது இடத்துக்குத்
தள்ளப்பட்டது. 2014 -ம் ஆண்டு உலகக்கிண்ணப்
போட்டியில் 'ரன்னர்-அப்' ஆக இருந்த ஆர்ஜென்ரீனா அணிஇ தகுதிச்சுற்றில் ஆறாவது
இடத்துக்குப் பின்தங்கியது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை
ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், இன்று நடைபெற்ற
தகுதிச்சுற்றில் ஈக்குவாடோர் அணியுடன் மோதியது
ஆர்ஜென்ரீனா அணி. ஆட்டம் தொடங்கி 20 நிமிடங்களில், அசத்தலாக இரண்டு கோல்களைப் போட்டார் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி. பின்னர் 3-1 என்ற கோல் கணக்கில்
ஈக்குவாடர் அணியை வீழ்த்தியது ஆர்ஜென்ரீனா
மெஸ்ஸி அடித்த ஹாட்ரிக் கோல், அர்ஜென்டினா அணியை
உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத்
தகுதிபெற வழிவகுத்தது மட்டுமல்லாமல், பேரழிவிலிருந்து
காப்பாற்றியுள்ளது.
No comments:
Post a Comment